பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்புடன் உலகளாவிய உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது; சுதந்திர தின உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி
Posted On:
15 AUG 2024 11:53AM by PIB Chennai
"இந்தியா முன்பு பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது, இன்று அது வலுவாகவும் தைரியமாகவும் உள்ளது; நமக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவருக்கும் ஆயுதப்படைகள் பொருத்தமான பதிலடி கொடுக்கின்றன"
கடந்த சில ஆண்டுகளில் அரசு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியா பாதுகாப்புத் துறையில் தற்சார்பை வை அடைந்து வருவதுடன், உலகளாவிய உற்பத்தி மையமாக உருவாகி வருகிறது.
ஆகஸ்ட் 15, 2024 அன்று 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி இதைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு பட்ஜெட்டில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் / உபகரணங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், தமது அரசு நாட்டைத் தற்சார்புடையதாக மாற்ற உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தியது என்றார். பல நேர்மறையான சுதேசமயமாக்கல் பட்டியல்களை அறிவிப்பது உட்பட தொடர்ச்சியான முடிவுகளை எடுத்ததற்காக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதப்படைகளை அவர் பாராட்டினார். இதில் 5,600- க்கும் மேற்பட்ட பொருட்கள் நியமிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு இந்திய தொழில்துறையிலிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் ராணுவ தளவாடங்கள் இறக்குமதியை முழுமையாக நம்பியிருந்த இந்தியா, தற்போது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.
அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி 2023-24 நிதியாண்டில் ரூ .1.27 லட்சம் கோடியை எட்டியது. இதே நிதியாண்டில், பாதுகாப்பு ஏற்றுமதி, 2022-23ம் நிதியாண்டை விட, 32.5 சதவீதம் அதிகரித்து, 21 ஆயிரத்து, 83 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதியில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ரூ.6,915 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன, இது 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்ததை விட 78% அதிகரித்துள்ளது. கடந்த இதே காலத்தில் இது ரூ.3,885 கோடியாக இருந்தது.
2016-ம் ஆண்டின் துல்லிய தாக்குதல் மற்றும் 2019 விமானத் தாக்குதலைக் குறிப்பிட்ட பிரதமர், தமது சுதந்திர தின உரையில், நாடு பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது; ஆனால் இன்று அது தைரியமாகவும் வலுவாகவும் உள்ளது, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவருக்கும் ஆயுதப்படைகள் பொருத்தமான பதிலடி கொடுக்கின்றன. தாய்நாட்டிற்கு தன்னலமின்றி சேவை செய்யும் துணிச்சலான வீரர்கள் குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது என்று அவர் கூறினார்.
அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் முன்னேற்றத்தில் பெண்கள் பங்கேற்பது மட்டுமின்றி, தலைமைப் பண்பையும் வகிக்கின்றனர் என்றார். ராணுவம், கடற்படை, விமானப்படை, விண்வெளி என எத்துறையாக இருந்தாலும், நம் நாட்டில் எப்போதும் வளர்ந்து வரும் பெண் சக்தியை நாம் காண்கிறோம்" என்று அவர் கூறினார்.
*****
PKV/ KV
(Release ID: 2045566)
Visitor Counter : 81