கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக தில்லியில் கலாச்சார அமைச்சகம் தேசியக்கொடி யாத்திரையை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 13 AUG 2024 6:57PM by PIB Chennai

78-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி ஆகியவை இணைந்து தேசியக்கொடி யாத்திரையை தில்லியில் நடத்தியது. இதில் பொதுமக்கள், அலுவலர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இந்த யாத்திரைக்கு கலாச்சாரத் துறை இணைச் செயலாளர் திருமதி உமா நந்தூரி, சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா, சாகித் அகாடமி செயலாளர் டாக்டர் சீனிவாச ராவ், லலித் கலா அகாடமி செயலாளர் திரு ராஜீவ் குமார், சங்கித நாடக அகாடமியின் செயலாளர் திரு ராஜூ தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த யாத்திரை நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044955

***

IR/RR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2045205) வருகையாளர் எண்ணிக்கை : 85
இந்த வெளியீட்டை படிக்க: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Telugu , Kannada