மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடைகள் கணக்கெடுப்புக்கு விரிவான பயிற்சியும், திறன் மேம்பாடும் அவசியம்: எஸ் பி சிங் பாகேல்

Posted On: 13 AUG 2024 5:28PM by PIB Chennai

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், கோவா மாநிலம் ஆகியவை இணைந்து கோவா மற்றும் கேரளாவின் மாநில மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு மென்பொருள் (மொபைல்  வலை பயன்பாடு தகவல் பலகை) மற்றும் பிறவற்றை குறித்த 21 வது கால்நடைகள் கணக்கெடுப்பின் பிராந்திய பயிற்சியை" நடத்தின. 2024 செப்டம்பர்-டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள 21 வது கால்நடை கணக்கெடுப்பை நடத்துவதற்காக புதிதாக தொடங்கப்பட்ட மொபைல் மற்றும் இணைய பயன்பாடுகள் குறித்து இந்த மாநிலங்களின் மாநில / மாவட்ட நோடல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக கோவாவின் பனாஜியில் இன்று இப்பயிற்சி நடைபெற்றது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இந்த பயிலரங்கை தொடங்கி வைத்தார்.

பயிலரங்கில் பேசிய பேராசிரியர் எஸ் பி சிங் விரிவான பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் பொருளாதாரத்தையும், உணவுப் பாதுகாப்பில் கால்நடைத் துறையின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கால்நடைகள் கணக்கெடுப்பை உன்னிப்பாக திட்டமிடி செயல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், சேகரிக்கப்பட்ட தரவுகள் எதிர்கால முன்முயற்சிகளை வடிவமைப்பதிலும், இத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

இந்தப் பயிலரங்கில் கால்நடை வளர்ப்பு புள்ளிவிவரப் பிரிவின் 21 வது கால்நடை கணக்கெடுப்பின் சுருக்கமான விளக்கத்துடன் தொடங்கி தொடர்ச்சியான அமர்வுகள் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து .சி..ஆர்-தேசிய விலங்கு மரபணு வளங்கள் பணியகக் குழுவினரின் விரிவான விளக்கக்காட்சி மூலம் கணக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய உயிரினங்களின் இன விவரங்கள் குறித்து விளக்கப்பட்டது. துல்லியமான இன அடையாளத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது, இது பல்வேறு கால்நடை துறை திட்டங்களில் பயன்படுத்தப்படும் துல்லியமான புள்ளிவிவரங்களை உருவாக்குவதற்கும் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் தேசிய குறியீட்டுக் கட்டமைப்பிற்கும் (என்ஐஎஃப்) முக்கியமானது. இந்த பயிலரங்கில், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் மென்பொருள் குழுவினரால் 21 வது கால்நடை கணக்கெடுப்பின் வழிமுறைகள் மற்றும் மென்பொருள் நேரடி பயன்பாடு குறித்த விரிவான அமர்வுகள் இருந்தன, இதற்கு மாநில மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கைபேசி பயன்பாடு மற்றும் தகவல் பலகை மென்பொருள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், அந்தந்த மாவட்டத் தலைமையிடங்களில் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2044875

***

SMB/AG/DL




(Release ID: 2044964) Visitor Counter : 40