எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு அமைச்சகத்தின் செயலாளராக திரு சந்தீப் பவுண்ட்ரிக் பொறுப்பேற்றார்

Posted On: 13 AUG 2024 2:32PM by PIB Chennai

எஃகு அமைச்சகத்தின் செயலாளராக திரு சந்தீப் பவுண்ட்ரிக் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவர், 1993-ம் ஆண்டு பிரிவின் இந்தியக் குடிமைப்பணி அதிகாரி ஆவார். பொறுப்பேற்க வந்த  அவரை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

திரு பவுண்ட்ரிக், தொழில்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்துடன், பீகார் அரசின் பல பதவிகளில் கூடுதல் பொறுப்புகளை வகித்தார். முன்னதாக, உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஆலோசகராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் இணை செயலாளராகவும் பணியாற்றினார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு, நாட்டில் எஃகுத் துறையின் முன்னேற்றம் குறித்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் விவாதித்தார்.

****

(Release ID: 2044801)

IR/RS/RR


(Release ID: 2044811) Visitor Counter : 69