பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்க சிறு வர்த்தக நிர்வாக தூதுக்குழுவினர் புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி அமைப்பு முறையை பார்வையிட்டனர்

Posted On: 12 AUG 2024 6:53PM by PIB Chennai

அமெரிக்க சிறு வணிக நிர்வாகத்தின் நிர்வாகி திருமதி இசபெல் கேசிலாஸ் குஸ்மான் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழு  2024, ஆகஸ்ட்  12 அன்று  புதுதில்லியில்  உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையின் திறன்மிக்க பாதுகாப்பு தளவாடத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் (ஐடெக்ஸ்)-  பாதுகாப்பு தளவாட புதுமைக் கண்டுபிடிப்பு அமைப்பை பார்வையிட்டனர்.

 

பாதுகாப்புத்தளவாட  உற்பத்தித் துறை இணைச் செயலாளர் திரு அமித் சதிஜா தலைமையிலான இந்தியத் தரப்பினருடன் இந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.

 

திறன்மிக்க பாதுகாப்பு தளவாடத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்த  அமெரிக்க தூதுக்குழுவிற்கு வழங்கப்பட்டது, புத்தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்களுடன்  ஈடுபடுவதன் மூலம் ஆழமான தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு வலுவான பாதுகாப்பு தளவாட கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை எவ்வாறு உருவாக்க முடிந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டது.

 

அமெரிக்க சிறு வர்த்தக நிர்வாக குழுவின் 27-வது நிர்வாகியான திருமதி இசபெல் கேசில்லாஸ் குஸ்மான், புத்தொழில்  காட்சிப்படுத்தல் மற்றும் இந்தியாவில் பாதுகாப்பு தளவாட புதுமைக் கண்டுபிடிப்பு அமைப்பை ஊக்குவித்த விதம் ஆகியவற்றைப் பாராட்டினார். கூட்டு வழிகளை ஆராய எதிர்வரும் உச்சிமாநாட்டின் போது ஐடெக்ஸ் மற்றும் அதன் புத்தொழில் நிறுவனங்களுடன் விவாதிப்பதை சிறு வர்த்தக நிர்வாக்குழு எதிர்நோக்குகிறது என்று அவர் கூறினார்.

அமெரிக்க சிறு வர்த்தக நிர்வாக குழு என்பது அந்நாட்டு அரசின் ஒரு தன்னாட்சி  நிறுவனமாகும். இது சிறு வணிகங்களை ஆதரிப்பதற்காக சிறு கடன் முதல் கடன் மற்றும் பங்கு முதலீட்டு மூலதனம் வரை பலவிதமான நிதி ஆதாரங்களை வழங்குகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044655

***

IR/RS/DL


(Release ID: 2044679) Visitor Counter : 57


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP