புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
"இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023" வெளியீடு
प्रविष्टि तिथि:
12 AUG 2024 5:31PM by PIB Chennai
மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம், "இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023" என்ற தலைப்பில் 25 வது இதழை வெளியிட்டுள்ளது.
இந்த வெளியீடு ஒரு விரிவான ஆவணமாகும், இது இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களின் நிலைமை குறித்த முழுமையான பார்வையைக் கொண்டுவர முயற்சிக்கிறது. மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தில் பங்கேற்பு, முடிவெடுப்பதில் பங்கேற்பு போன்ற பரந்த அளவிலான தலைப்புகளில் தரவை வழங்குகிறது. இது பாலினம், நகர்ப்புற-கிராமப்புற பாகுபாடு புவியியல் பகுதி ஆகியவற்றால் பிரிக்கப்பட்ட தரவை முன்வைக்கிறது, இது பெண்கள் மற்றும் ஆண்களின் வெவ்வேறு குழுக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து பெறப்பட்ட முக்கியமான குறியீடுகளை இந்த வெளியீடு உள்ளடக்கியுள்ளது.
"இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023" பாலின சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவது மட்டுமின்றி, பல்வேறு சமூக-பொருளாதார குறிகாட்டிகளை ஆராய்வதன் மூலம், இந்த வெளியீடு காலப்போக்கில் போக்குகளின் சில பகுப்பாய்வுகளை வழங்குகிறது. இதன் மூலம் கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், பாலின உணர்திறன் கொள்கைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவுகிறது.
"இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023" அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mospi.gov.in/) கிடைக்கிறது.
வெளியீட்டின் சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
2036 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2011 ல் 48.5% உடன் ஒப்பிடும்போது 48.8% சற்று மேம்பட்ட பெண் சதவீதம். 15 வயதிற்குட்பட்ட தனிநபர்களின் விகிதம் 2011 முதல் 2036 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கருவுறுதல் குறைந்து வருவதால் இருக்கலாம். மாறாக, 60 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய மக்கள்தொகையின் விகிதம் இந்தக் காலகட்டத்தில் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 2036 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை அதிக பெண்களைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பாலின விகிதத்தில் பிரதிபலிக்கிறது, இது 2011-ல் 943 என்பதிலிருந்து 2036-க்குள் 952 ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது பாலின சமத்துவத்தில் நேர்மறையான போக்கை எடுத்துக்காட்டுகிறது.
2020 ஆம் ஆண்டில் இளம் பருவ கருவுறுதல் விகிதம் கல்வியறிவு இல்லாதவர்களுக்கு 33.9 ஆகவும், கல்வியறிவு பெற்றவர்களுக்கு 11.0 ஆகவும் இருந்தது. கல்வியறிவு பெற்ற, ஆனால் முறையான கல்வி இல்லாதவர்களுக்கு கூட (20.0) இது கணிசமாகக் குறைவாகும், இது பெண்களுக்கு கல்வி வழங்குவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
பேறுகால இறப்பு விகிதம் நீடித்த வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஒன்றாகும், மேலும் 2030-க்குள் அதை 70 ஆகக் குறைக்க வேண்டும் என்பது நீடிக்கத்தக்க வளர்ச்சி கட்டமைப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, இந்தியா தனது பேறுகால இறப்பு விகிதத்தை உரிய காலத்தில் குறைத்து முக்கிய மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளது. நீடித்த வளர்ச்சிக்கான இலக்கையும் எட்டுவது சாத்தியமாகும்.
சிசு மரண விகிதம், ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. பெண் குழந்தைகள் எப்போதும் ஆண் குழந்தைகளை விட அதிகமாக இருந்தது, ஆனால் 2020 ஆம் ஆண்டில், இருவரும் 1000 நேரடி பிறப்புகளுக்கு 28 குழந்தைகள் என்ற அளவில் சமமாக இருந்தனர். 2015 ஆம் ஆண்டில் 43 ஆக இருந்த 5 வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் 2020 ஆம் ஆண்டில் 32 ஆக குறைந்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. சிறுவர், சிறுமியர் இருவருக்கும் இதே நிலைதான், சிறுவர், சிறுமியருக்கான இடைவெளியும் குறைந்துள்ளது.
காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2017-18 ஆம் ஆண்டு முதல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களின் தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் ஆண்,பெண் இருபாலருக்கும் அதிகரித்து வருகிறது. 2017-18 முதல் 2022-23 வரை ஆண்களின் தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் 75.8 லிருந்து 78.5 ஆகவும், இதே காலகட்டத்தில் பெண்களின் தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் 23.3 லிருந்து 37 ஆகவும் உயர்ந்துள்ளது.
15-வது பொதுத்தேர்தல் (1999) வரை, 60%-க்கும் குறைவான பெண் வாக்காளர்கள் பங்கேற்றனர், ஆண்களின் வாக்குப்பதிவு 8 சதவீதம் அதிகமாக இருந்தது. இருப்பினும், 2014 தேர்தல்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறித்தன, பெண்களின் பங்கேற்பு 65.6% ஆகவும், 2019 தேர்தல்களில் 67.2% ஆகவும் அதிகரித்தது. முதன்முறையாக, வாக்காளர் வாக்குப்பதிவு சதவீதம் பெண்களுக்கு ஓரளவு அதிகமாக இருந்தது, இது பெண்களிடையே அதிகரித்து வரும் கல்வியறிவு மற்றும் அரசியல் விழிப்புணர்வின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை 2016 ஜனவரியில் தொடங்கப்பட்டதிலிருந்து 2023 டிசம்பர் வரை மொத்தம் 1,17,254 ஸ்டார்ட்-அப்களை அங்கீகரித்துள்ளது. இவற்றில், 55,816 ஸ்டார்ட்-அப்கள் பெண்களால் வழிநடத்தப்படுகின்றன, இது அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஸ்டார்ட்-அப்களில் 47.6% ஆகும். இந்த குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் பெண் தொழில்முனைவோரின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044607
***
SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2044648)
आगंतुक पटल : 617