ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி கைத்தறி கண்காட்சியை திரு கிரிராஜ் சிங், திரு பபித்ரா மார்கரிட்டா ஆகியோர் பார்வையிட்டனர்

Posted On: 12 AUG 2024 5:30PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் 2024 ஆகஸ்ட் 3 முதல் 16 வரை, புதுதில்லி ஜன்பத்தில் 10வது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடுவதற்கான பதினைந்து கைத்தறி நாள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் கலந்துரையாடிய திரு கிரிராஜ் சிங், நெசவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறந்த வருமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஜவுளித் துறையை மேம்படுத்த அரசு முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

கைத்தறித் துறையில் இயற்கை சாயங்களின் பயன்பாட்டு நேரடி கண்காட்சியை பார்வையிட்ட திரு பபித்ரா மார்கெரிட்டா, தற்காலத்தில் நவநாகரிக தொழில்துறையில் இயற்கை சாயங்கள் கைத்தறி துணிகளுக்கான சந்தை அதிக தேவையை கண்டு வருவதாக குறிப்பிட்டார். கைத்தறி நெசவாளர்கள் இயற்கை சாயங்களைப் பயன்படுத்துவதால், மதிப்புக் கூட்டுதல் மட்டுமின்றி, அவர்களின் வருவாயும் அதிகரிக்கிறது என்று கூறினார்

கைத்தறி சந்தையில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை அமைச்சர்கள் ஊக்குவித்தனர். இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு மூவர்ணக் கொடிகளை விநியோகித்தனர்.

இந்த கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட கைத்தறி பொருட்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோசா, சந்தேரி, மதுபானி, மங்களகிரி, மேக்லா சடோர், மொய்ராங் பீ, இகாட் போன்றவை இதில் அடங்கும்.

கைத்தறி கண்காட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் நேரடியாக பொருட்களை சில்லறை விற்பனை செய்ய 75 அரங்குகள் மற்றும் தலைமை சங்கங்கள், வாரியங்கள் மூலம் 07 விற்பனை அரங்குகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் நேர்த்தியான கைத்தறிகளின்

இந்தியாவில் விவசாயத் துறைக்கு அடுத்தபடியாக, கைத்தறித் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறி பொருட்களின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுவதுடன், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத மற்றும் குறைபாடுகள் இல்லாத உயர்தர பொருட்களை பிராண்டிங் செய்வதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. வாங்கும் தயாரிப்பு உண்மையிலேயே கைவினைப்பொருள் என்பதற்கான உத்தரவாதத்தையும் இது வழங்குகிறது.

இக்கண்காட்சியில் கலந்து கொள்ளும் அனைத்து கண்காட்சியாளர்களும் தங்களது நேர்த்தியான கைத்தறி இரகங்களை காட்சிக்கு வைக்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம், கைத்தறி இரகங்களுக்கான சந்தையை மேம்படுத்துவதும், கைத்தறி சமுதாயத்தின் வருவாயை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044606

-------------------

IR/RS/DL


(Release ID: 2044637) Visitor Counter : 60