மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கீழ் இயங்கும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்களை இறுதி செய்வது குறித்த இரண்டு நாள் பயிலரங்கை புதுதில்லியில் நடத்தியது

Posted On: 12 AUG 2024 3:36PM by PIB Chennai

புதுதில்லியில் நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்களை இறுதி செய்வது குறித்த இரண்டு நாள் பயிலரங்கு, 2024 ஆகஸ்ட் 8, 9 ஆகிய நாட்களில் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் சார்பில் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. இது கால்நடை மற்றும் விலங்குகள் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 78 முக்கிய பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது. இதில் இந்திய வேளாண்   ஆராய்ச்சிக் குழுமம், கால்நடை அறிவியல் கழகங்கள், கால்நடை பல்கலைக்கழகங்கள், இந்திய கால்நடை  சுகாதார  நிறுவன கூட்டமைப்பு போன்ற தனியார் துறை நிறுவனங்கள், உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை, சர்வதேச கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளர்ச்சித் துறை போன்ற சர்வதேச  அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நாடு முழுவதும் நிலையான  கால்நடை பராமரிப்பு  நடைமுறைகளை தரப்படுத்தும் வழிகாட்டுதல்களை ஒத்துழைப்புடன் உருவாக்குவதே இப்பயிலரங்கின் முதன்மை குறிக்கோள் ஆகும்.

 

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா 2024  ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்ற நிறைவு அமர்வில் கலந்து கொண்டார். வாழ்வாதாரத்தை ஆதரிப்பதிலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் கால்நடை பராமரிப்புத் துறையின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களின் மதிப்பு மட்டும் 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. வேளாண் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் ஒப்பிடும்போது இந்தத் துறை மிக விரைவான விகிதத்தில் வளர்ந்து வருவதால், இந்தியா அதன் பெரிய எண்ணிக்கையில் கால்நடை மற்றும் கோழிகளுக்கு தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்கள் அடிக்கடி ஏற்படுகிறது என்று  தெரிவித்தார். திறம்பட நிர்வகிக்கப்படாவிட்டால், இந்த நோய்கள் சமூக வாழ்வாதாரங்களில் குறிப்பிடத்தக்க மற்றும் கணிக்க முடியாத எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறினார். ஒரு சில வளரும் நாடுகளில் மட்டுமே நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்கள் இருப்பதால், இந்தியாவிற்கான நிலையான  கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்களை உருவாக்குவது ஒரு முக்கிய முயற்சியாகும்.  என்று கூறினார். இந்த முயற்சி நாடு முழுவதும் பல்வேறு நோய்களுக்கு ஒரு நிலையான சிகிச்சை வழிகாட்டுதலை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று  குறிப்பிட்டார். இதை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து நிபுணர்களின் முயற்சிகளையும் திருமதி உபாத்யாயா பாராட்டினார்.

இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு விரிவான, நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல் ஆவணத்தை உருவாக்குவதே பயிலரங்கின் முதன்மை நோக்கமாகும். இந்த வழிகாட்டுதல்கள் கால்நடை சுகாதார பயிற்சியாளர்களுக்கு ஒரு வலுவான கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கால்நடை மருந்து மேற்பார்வையை ஊக்குவிப்பது, பயிலரங்கின் முக்கிய நோக்கமாகும்.  கால்நடைகள், எருமை, செம்மறி ஆடுகள், ஆடு, கோழி, பன்றி, குதிரைகள், கழுதை, கோவேறு கழுதை, ஒட்டகம், யாக் மற்றும் மிதுன் ஆகிய 12 முக்கிய இனங்களை உள்ளடக்கிய மொத்தம் 274 நோய்களுக்கான நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்களை உள்ளடக்கியது. இந்த பயிலரங்கின் வெளிப்பாடுகள், இந்தியாவில் உள்ள கால்நடை துறையில் நீண்டகால மற்றும் மாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044544

***

IR/RS/KV



(Release ID: 2044589) Visitor Counter : 41