புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய, மாநில புள்ளியியல் அமைப்புகளின் 28-வது மாநாட்டின் தொடக்க அமர்வு 2024, ஆகஸ்ட் 12 அன்று புதுதில்லியில் நடைபெற்றது
Posted On:
12 AUG 2024 1:26PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மத்திய, மாநில புள்ளியியல் அமைப்புகளின் 28-வது மாநாட்டை 2024, ஆகஸ்ட் 12 முதல் 13 வரை புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள் மற்றும் பிற தொடர்புடையோர் கலந்து கொள்கின்றனர். இந்திய புள்ளியியல் அமைப்பின் செயல்திறனை கூட்டு அணுகுமுறையில் மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில புள்ளியியல் அமைப்புகளுக்கு இடையே, விவாதம் மற்றும் மேம்பட்ட ஒருங்கிணைப்புக்கான ஒரு நிறுவன தளத்திற்கான வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்துகிறது. "முடிவெடுப்பதற்கு தரவுகளைப் பயன்படுத்துதல், மாநில புள்ளியியல் அமைப்புகளை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பிலான இந்த மாநாட்டின் கருப்பொருள், கருத்துப் பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள், பொதுவான நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்த விவாதம் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள் ஆகியவற்றை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங், 2024,ஆகஸ்ட் 12 அன்று இம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர், நிர்வாக செயல்பாட்டில் தரவுகளின் தரம், நேரம் மற்றும் பொருத்தத்தை மேம்படுத்துவதற்கான முறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து விவாதிப்பதற்காக, தேசிய புள்ளியியல் அமைப்பின் சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புடையோர்களையும் ஒரு அமைப்பில் ஒன்றிணைப்பதால், கூட்டாட்சி அமைப்பில் மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்தியாவில் பெண்கள், ஆண்கள், 2023 என்ற 25-வது இதழ் இன்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது. இந்த விரிவான மற்றும் நுண்ணறிவு மிக்க ஆவணம், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் தற்போதைய நிலை குறித்த முழுமையான பார்வையை வழங்குகிறது. மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்களிப்பு மற்றும் முடிவெடுக்கும் ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முக்கியமான தரவை முன்வைக்கிறது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள், 2023 என்ற இதழ், நகர்ப்புறம்-கிராமப்புறம் மற்றும் புவியியல் பகுதி ஆகியவற்றின் தனித் தரவை வழங்குகிறது. இது பெண்கள் மற்றும் ஆண்களின் பல்வேறு குழுக்களின் நிலை குறித்த நுணுக்கமான புரிதலை வழங்குகிறது. இந்த வெளியீடு நாட்டின் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.
2004-06-ம் ஆண்டில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 254 ஆக இருந்த நிலையில், 2018-20-ம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு 97 ஆக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது இந்த அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்களாகும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமும் 2015 ல் 43 ஆக இருந்தநிலையில், 2020ல் 32 ஆக குறைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044445
**
IR/RS/KV
(Release ID: 2044519)
Visitor Counter : 128