சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ், யானைக்கால் நோயை ஒழிப்பதற்காக நாடு தழுவிய மருந்து நிர்வாக இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைத்தார்
Posted On:
10 AUG 2024 2:53PM by PIB Chennai
யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான நாடு தழுவிய மருந்து மேலாண்மை இயக்கத்தின் (எம்டிஏ) இரண்டாம் கட்டத்தை மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் இன்று (10.08.2024) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பீகார், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 63 மாவட்டங்களை இலக்காகக் கொண்ட இந்த இயக்கம், நோய்த்தாக்கம் உள்ள பகுதிகளில் வீட்டுக்கு வீடு தடுப்பு மருந்துகளை வழங்குவதுடன், உலகளாவிய இலக்கை விட நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் இலக்கை முன்னெடுத்துச் செல்லும். இதனுடன், 'யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல், தகவல், கல்வி செயல்முறைகளும் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் திரு பன்னா குப்தா (ஜார்க்கண்ட்), திரு மங்கள் பாண்டே (பீகார்), திரு தாமோதர் ராஜநரசிம்ஹா (தெலங்கானா), டாக்டர் முகேஷ் மகாலிங் (ஒடிசா), திரு ஜெய் பிரதாப் சிங் (உத்தரபிரதேசம்), திரு தினேஷ் குண்டுராவ் (கர்நாடகா) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தமது முக்கிய உரையில், கொசுக்களால் பரவும் நோயான நிணநீர் யானைக்கால் நோய், எளிய நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியது. மருந்து நிர்வாகம் அதன் பரவலைத் தடுப்பதில் முக்கியமானது என்று அவர் கூறினார்.
கொசுக்கடியைத் தவிர்ப்பது மற்றும் யானைக்கால் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் நிணநீர் யானைக்கால் நோய் பரவுவதைத் தடுக்க முக்கியமாக அமையும் என்று அவர் தெரிவித்தார். இந்த நோய் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிப்பது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் இயலாமைக்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவில் யானைக்கால் நோயைத் தடுக்கவும், ஒழிக்கவும் அர்ப்பணிப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். யானைக்கால் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் வழங்கப்படுவதையும் அவர் எடுத்துரைத்தார்.
2004 ஆம் ஆண்டில் யானைக்கால் நோயை ஒழிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதில் தாங்கள் அடைந்த சாதனைகள் மற்றும் முயற்சிகள் குறித்து மாநில சுகாதார அமைச்சர்கள் பேசினர். மத்திய அரசின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், நோயை ஒழிப்பதில் தங்கள் உறுதிப்பாட்டை உறுதி செய்தனர்.
சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஆராதனா பட்நாயக், நிணநீர் யானைக்கால் நோய் தடுக்கக்கூடிய நோய் என்றும், இந்த எம்.டி.ஏ இயக்கம் தற்போது 6 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 10
சுகாதார அமைச்சகத்தின்இணைச் செயலாளர் திருமதி வந்தனா ஜெயின், கொசுக்களால் பரவும் நோயான நிணநீர் யானைக்கால் நோயை எளிய நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் என்றார்.
பின்னணி
நிணநீர் யானைக்கால் நோய் (எல்.எஃப்) பொதுவாக யானைக்கால் நோய் (ஹாட்டிபாவோன்) என்று அழைக்கப்படுகிறது. இது அழுக்கு / மாசுபட்ட நீரில் இனப்பெருக்கம் செய்யும் கியூலெக்ஸ் கொசு கடிப்பதன் மூலம் பரவும் ஒரு தீவிர நோயாகும்.
இதை 2027 க்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 345 மாவட்டங்களில் எல்.எஃப் பதிவாகியுள்ளது. பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் 90% பங்களிக்கின்றன. இதைத் தடுக்க இந்தியா ஒரு விரிவான ஐந்து முனை திட்டத்தைப் பயன்படுத்துகிறது.
****
PLM/DL
(Release ID: 2044071)
Visitor Counter : 60