ஜவுளித்துறை அமைச்சகம்
விருதுநகர் உட்பட 7 இடங்களில் பிஎம்-மித்ரா பூங்காக்கள்
प्रविष्टि तिथि:
09 AUG 2024 6:16PM by PIB Chennai
கிரீன்ஃபீல்ட் பிரவுன்ஃபீல்ட் தளங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் 7 (ஏழு) மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆடை பூங்காக்களை (பிஎம்-மித்ரா) 2027-28 வரையிலான ஏழு ஆண்டு காலத்திற்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்காக தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ), மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை அரசு இறுதி செய்துள்ளது.
இப்பூங்கா கட்டி முடிக்கப்பட்டால், ஒவ்வொரு பூங்காவும் சுமார் ரூ.10,000 கோடி முதலீட்டிற்கு (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கு) வழிவகுக்கும். இது உள்ளூர் பொருளாதாரம் மற்றும் ஜவுளி சுற்றுச்சூழல் அமைப்புக்கு பயனளிக்கும்.
குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 பசுமை வள தளங்களுக்கான சிறப்பு நோக்கு நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பிரவுன்ஃபீல்டு இடங்களைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா, தற்போதுள்ள செயல்படுத்தல் ஏற்பாடுகள் வழிகாட்டுதல்களின்படி தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.
பிஎம் மித்ரா பூங்கா திட்டத்தின் கீழ், கிரீன்ஃபீல்ட் பிஎம்-மித்ரா மற்றும் பிரவுன்ஃபீல்ட் பிஎம்-மித்ரா பூங்காவை மேம்படுத்துவதற்காக, மைய உள்கட்டமைப்பை உருவாக்க மேம்பாட்டு மூலதன ஆதரவு திட்ட செலவில் @30% அதிகபட்சமாக ரூ.500 கோடி மற்றும் ரூ.200 கோடி இந்திய அரசிடமிருந்து வழங்கப்படுகிறது. மேலும், தனிப்பட்ட அலகுகளுக்கு போட்டி ஊக்குவிப்பு ஆதரவு ஒரு பூங்காவுக்கு அதிகபட்சமாக ரூ.300 கோடிக்கு உட்பட்டு, மேலும் திட்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, பிஎம் மித்ரா பூங்காக்களில் உற்பத்தி அலகுகளை முன்கூட்டியே அமைக்க ஊக்குவிப்பதற்காக பிஎம்-மித்ராவின் கீழ் வழங்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
PKV/KPG/DL
(रिलीज़ आईडी: 2043916)
आगंतुक पटल : 114