ஆயுஷ்
பிரமதரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் ஆயுஷ்
Posted On:
09 AUG 2024 5:36PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் பிரமதரின் ஜன் ஆரோக்கிய திட்டம் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) இந்தியாவின் மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 கோடி பயனாளிகளுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்க ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆயுஷ் தொகுப்புகளை சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆயுஷ் தொகுப்புகளை ஏபி பிஎம்-ஜேஏ உடன் ஒருங்கிணைக்கும் உத்தேச அமலாக்க மாதிரி குறித்து தேவையான விவாதத்திற்காக தேசிய சுகாதார ஆணையம் மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இடையேயான கூட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கம் செய்யும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சம்பந்தப்பட்ட பரந்த அளவிலான பங்குதாரர் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஆயுஷ் தொகுப்பு ஒருங்கிணைப்பின் பல்வேறு அம்சங்கள், தொகுப்பு வடிவமைப்பு, தொகுப்பு செலவு, ஆயுஷ் மருத்துவமனை தங்குமிடம், நிலையான சிகிச்சை வழிகாட்டுதல்கள், புறநிலையாக வரையறுக்கப்பட்ட சிகிச்சை வெளிப்பாடுகள், நிதி தாக்கங்கள் போன்றவை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
(i) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில், பதிவு செய்துள்ள ஓய்வூதியதாரர்கள் அலோபதி மற்றும் ஆயுஷ் அதாவது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகள் மூலம் சுகாதார சேவைகளை அணுகலாம். தற்போது, சி.ஜி.எச்.எஸ் இந்தியாவில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையுடன் 110 ஆயுஷ் ஆரோக்கிய மையங்களை நடத்துகிறது. கூடுதலாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து 20 யோகா பயிற்சியாளர்கள் பல்வேறு சிஜிஎச்எஸ் ஆரோக்கிய மையங்களில் பயனாளிகளுக்கு யோகா ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
---
PKV/KPG/DL
(Release ID: 2043911)