கலாசாரத்துறை அமைச்சகம்
பாரி திட்டம்
Posted On:
08 AUG 2024 2:01PM by PIB Chennai
பாரி (இந்தியப் பொதுக் கலை) திட்டம் என்பது இந்தியாவில் பொது கலை காட்சியைக் கொண்டாடுவதற்கும், மேம்படுத்துவதற்கும், கலாச்சார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். லலித் கலா அகாடமி மற்றும் தேசிய நவீன கலைக்கூடம் ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், 2024 ஜூலை 21-31 வரை புதுதில்லியில் நடைபெறும் 46வது உலக பாரம்பரியக் குழு கூட்டத்துடன் ஒத்துப்போகிறது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை சமகால கருப்பொருள்களுடன் கலக்கும் பொதுக் கலைகள் மூலம் உரையாடல் மற்றும் பிரதிபலிப்பைத் தூண்டுவதை பாரி நோக்கமாகக் கொண்டுள்ளது.
200-க்கும் மேற்பட்ட காட்சி கலைஞர்கள் ஒன்றிணைந்து. பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்கள், சுவர் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் பாட் ஓவியங்கள், தங்கா ஓவியங்கள், வார்லி கலை, கோண்டு கலை, அல்போனா கலை, செரியல் ஓவியம், தஞ்சாவூர் ஓவியங்கள், கலம்காரி, பித்தோர கலை, கேரள சுவரோவியங்கள் போன்றவற்றை வெவ்வேறு கருப்பொருள்களில் உருவாக்கினர். இந்த திட்டம், இந்தியாவின் அழகியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், டெல்லியின் காட்சி மற்றும் கலாச்சார நிலப்பரப்பை மேம்படுத்துவதையும், சமூகத்திற்குள் பெருமை மற்றும் சொந்தமான உணர்வுக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறமையான கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சார வரலாற்றை சமகால கலை கருப்பொருள்களுடன் இணைக்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியே பாரி திட்டம்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2043016)
MM/AG/KR
(Release ID: 2043163)
Visitor Counter : 72