சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதிமன்றங்களை கணினிமயமாக்குதல்
Posted On:
08 AUG 2024 1:02PM by PIB Chennai
தேசிய மின் ஆளுமை திட்டத்தின் ஒரு பகுதியாக, "இந்திய நீதித்துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின்" அடிப்படையில், இந்திய நீதித்துறையின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான, மின்னணு நீதிமன்ற குறிக்கோள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழுவுடன் ஒருங்கிணைந்து நீதித்துறை செயல்படுத்தி வருகிறது.
2011-2015 ஆம் ஆண்டில் கணினிமயமாக்கலின் அடிப்படைகளான கணினி வன்பொருள் அமைத்தல், இணையதள இணைப்பை உறுதி செய்தல் மற்றும் மின்னணு நீதிமன்ற தளத்தை இயக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.935 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை, 639.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:
14,249 மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
13,683 நீதிமன்றங்களில் உள்ளூர் பகுதி கட்டமைப்பு (லேன்) நிறுவப்பட்டுள்ளது, 13,436 நீதிமன்றங்களில் வன்பொருள் வழங்கப்பட்டுள்ளது, 13,672 நீதிமன்றங்களில் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது.
14,309 நீதித்துறை அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு, அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் மாற்று மேலாண்மை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
3900-க்கும் மேற்பட்ட நீதிமன்ற ஊழியர்கள், வழக்கு தகவல் அமைப்பில் (சிஐஎஸ்) கணினி நிர்வாகிகளாக பயிற்சி பெற்றனர்.
493 நீதிமன்ற வளாகங்கள் மற்றும் 347 தொடர்புடைய சிறைச்சாலைகளுக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
3. 2015-2023-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட மின்னணு நீதிமன்றங்கள் மற்றும் சார்நிலை நீதிமன்றங்களின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட பல்வேறு முன்முயற்சிகளை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. ரூ.1670 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.1668.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2023 வரை 18,735 நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. சட்ட நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், அனைத்து பங்குதாரர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதற்கு, பின்வரும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இவை சட்ட அமைப்பின் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகின்றன: -
பரந்த பரப்பு கட்டமைப்பு (WAN) திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள மொத்த நீதிமன்ற வளாகங்களில் 99.4% (ஒதுக்கப்பட்ட 2992 இல் 2977) 10 Mbps முதல் 100 Mbps அலைவரிசை வேகத்துடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நீதித்துறை தரவு கட்டம் (NJDG) என்பது உத்தரவுகள், தீர்ப்புகள் மற்றும் வழக்குகளின் தரவுத்தளமாகும், இது eCourts திட்டத்தின் கீழ் ஆன்லைன் தளமாக உருவாக்கப்பட்டது. இது நாட்டின் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களின் நீதித்துறை நடவடிக்கைகள் / முடிவுகள் தொடர்பான தகவல்களை வழங்குகிறது. 26.06 கோடிக்கும் அதிகமான வழக்குகள் மற்றும் 26.91 கோடிக்கும் அதிகமான உத்தரவுகள் / தீர்ப்புகள் (01.08.2024 நிலவரப்படி) தொடர்பான வழக்கு நிலவர தகவல்களை வழக்காடுபவர்கள் அணுகலாம்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்ற விசாரணையை நடத்துவதில் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுத்துள்ளது. மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் 30.06.2024 வரை 2,35,64,731 வழக்குகளையும், உயர்நீதிமன்றங்கள் 87,08,727 வழக்குகளையும் (மொத்தம் 3.22 கோடி) காணொலி காட்சி முறையைப் பயன்படுத்தி விசாரித்துள்ளன. மாண்புமிகு உச்சநீதிமன்றம் 04.06.2024 வரை 7,54,443 விசாரணைகளை காணொலி காட்சி மூலம் நடத்தியுள்ளது.
7. போக்குவரத்து செலுத்துச் சீட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 28 மெய்நிகர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5.26 கோடிக்கும் அதிகமான வழக்குகள் 28 மெய்நிகர் நீதிமன்றங்களால் கையாளப்பட்டுள்ளன, மேலும் 56 லட்சத்துக்கும் மேற்பட்ட (56,51,204) வழக்குகளில், 30.06.2024 வரை ரூ.579.40 கோடிக்கு மேல் ஆன்லைன் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சட்ட ஆவணங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய புதிய மின்னணு தாக்கல் முறை (பதிப்பு 3.0) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரைவு மின்னணு முறையில் தாக்கல் செய்யும் விதிகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்காக உயர்நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. 30.06.2024 நிலவரப்படி மொத்தம் 25 உயர்நீதிமன்றங்கள் மின்னணு தாக்கல் செய்வதற்கான மாதிரி விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
12. தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு மூலம் உருவாக்கப்பட்ட தகவல் தொகுப்புகளை திறம்பட பயன்படுத்தவும், அந்த தகவல்களை பொதுமக்கள் கண்டுகொள்ளவும் "நீதி கடிகாரம்" என்றழைக்கப்படும் எல்.இ.டி. காட்சி தகவல் பலகை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. நீதி கடிகாரத்தின் நோக்கம் நீதித்துறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 25 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 39 நீதிக் கடிகாரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மெய்நிகர் நீதி கடிகாரமும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
ரூ.7,210 கோடி மதிப்பீட்டில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை 2023 முதல் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்த மத்திய அமைச்சரவை 13.09.2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. மரபுரிமை ஆவணங்கள் உட்பட முழு நீதிமன்ற ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும், அனைத்து நீதிமன்ற வளாகங்களையும் மின்னணு சேவை மையங்களுடன் செறிவூட்டுவதன் மூலம் மின்னணு தாக்கல் / மின்னணு பணப் பட்டுவாடா முறையை அனைவருக்கும் கொண்டு வருவதன் மூலமும், மின்னணு நீதிமன்றங்கள் மற்றும் காகிதமற்ற நீதிமன்றங்களை நோக்கி நகர்வதன் மூலம் அதிகபட்ச நீதியை எளிமையாக்கும் ஆட்சியை உருவாக்குவதே மின்னணு நீதிமன்றங்களின் மூன்றாம் கட்டத்தின் நோக்கமாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042986
***
MM/AG/KR
(Release ID: 2043086)
Visitor Counter : 73