சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பருவமழைக் காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை
Posted On:
07 AUG 2024 1:15PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பராமரித்தல் அமைச்சகத்தின் முதன்மையான பொறுப்பாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதும் பராமரிப்பதும், ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். தேசிய நெடுஞ்சாலைகளின் நிலைமைகளை அமைச்சகம் மற்றும் அதன் பல்வேறு செயலாக்க முகமைகளான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு, பொதுப்பணித் துறைகள் / சாலை கட்டுமானத் துறைகள் / மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவை அவ்வப்போது மதிப்பீடு செய்கின்றன. அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளை போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் வைத்திருக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு காரணங்களால் ஏற்படும் சேதங்களை சரிசெய்தல், தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்து வலுப்படுத்துதல், போதுமான வடிகால் அமைப்புகளை அமைத்தல் போன்றவை இப்பணிகளில் அடங்கும்.
அனைத்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு / மேம்பாட்டுத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் போது, மழைப்பொழிவு, அதிக வெள்ள அளவு, நிலப்பரப்பு வகை, மண் வகை போன்றவை தவிர்க்க முடியாமல் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அதன்படி, சாலையோர வரிசைப்படுத்தப்பட்ட / மூடப்படாத வடிகால்கள், குறுக்கு வடிகால் கட்டமைப்புகளான சிறு பாலங்கள், இயற்கை ஓடைகளின் குறுக்கே சிறிய மற்றும் பெரிய பாலங்கள் அமைத்தல் போன்றவை ஒப்பந்த வரம்பின்படி ஒப்பந்ததாரர் / சலுகைதாரரால் நிர்ணய விவரக் குறிப்புகள் மற்றும் இந்திய சாலைகள் காங்கிரஸ் (ஐ.ஆர்.சி) விதிகளின்படி மேற்கொள்ளப்படுகின்றன.
பாலங்கள் உட்பட அனைத்து தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பை, பொறுப்பான பராமரிப்பு முகமை மூலம் உறுதி செய்வதற்கான நடைமுறையை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்ட அல்லது இயக்கம், பராமரிப்பு மற்றும் பரிமாற்ற சலுகைகள் / செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும பழுதுபார்ப்பு, குறைபாடு பொறுப்புக் காலம் (DLP) / சலுகைக் காலம் முடியும் வரை சம்பந்தப்பட்ட சலுகையாளர்கள் / ஒப்பந்ததாரர்களின் பொறுப்பாகும். இதேபோல், TOT (டோல் ஆபரேட்டிங் மற்றும் டிரான்ஸ்ஃபர்) மற்றும் InvIT (இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்) ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பொறுப்பு சலுகை காலம் முடியும் வரை சம்பந்தப்பட்ட சலுகையாளரிடம் உள்ளது.
மீதமுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், ஒப்பந்த பராமரிப்பு மூலம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அமைச்சகம் கொள்கை முடிவு எடுத்துள்ளது. இது செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (PBMC) அல்லது குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தம் (STMC) என இரண்டில் ஒன்று என தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தப் பிரிவும் பொறுப்பேற்கக்கூடிய ஒப்பந்த பராமரிப்பு முகமை இல்லாமல் இருக்கக்கூடாது.
கடந்த ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக அமைச்சகம் ரூ.6,523 கோடி செலவிட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 2042511)
MM/KPG/KR
(Release ID: 2042670)
Visitor Counter : 71