குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள அமிர்த தோட்டத்தை ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை பொதுமக்கள் பார்வையிடலாம்
Posted On:
06 AUG 2024 7:58PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஆகஸ்ட் 14, 2024 அன்று அமிர்த தோட்டத்தின் கோடைகால ஆண்டுப் பதிப்பு, 2024 இன் தொடக்க விழாவில் கலந்து கொள்வார். அமிர்த தோட்டம் ஆகஸ்ட் 16- செப்டம்பர் 15, 2024 காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் (கடைசி நுழைவு மாலை 05:15 மணிக்கு இருக்கும்).
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு முதல் முறையாக ஆகஸ்ட் 29-ஆம் தேதி விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும். பராமரிப்புக்காக அனைத்து திங்கட்கிழமைகளிலும் அமிர்த தோட்டம் மூடப்பட்டிருக்கும்.
குடியரசுத்தலைவர் மாளிகை இணையதளத்திலும் (https://visit.rashtrapatibhavan.gov.in
குடியரசுத்தலைவர் மாளிகை நுழைவாயில் எண் 35-க்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சுய சேவை மையங்கள் மூலமாகவும் பார்வையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.
https://visit.rashtrapatibhavan.gov.in/
என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து குடியரசுத்தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகை அருங்காட்சியகம், புதுதில்லியில் நடைபெறும் காவலர் மாற்ற விழா, சிம்லாவில் உள்ள ராஷ்டிரபதி நிவாஸ் மஷோப்ரா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் ஆகியவற்றையும் பார்வையாளர்கள் பார்வையிடலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042326
BR/KR
***
(Release ID: 2042422)
Visitor Counter : 56