வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகள்
Posted On:
06 AUG 2024 4:17PM by PIB Chennai
நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும், அதிக தொழில்துறை செயல்பாடுகளை ஈர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) மற்றும் பிற மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மூலம், பொருத்தமான கொள்கை தலையீடுகள் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கான சூழலை வழங்குகிறது. இதர அமைச்சகங்கள்/துறைகளில் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் கூடுதலாக, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, பிஎம் கதிசக்தி, தேசிய தொழில் வழித்தடத் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவித்தல் மற்றும் இணக்க சுமையைக் குறைத்தல் போன்ற, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள தொழில்களை மேம்படுத்தவும், வசதி செய்யவும் இத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேசிய ஒற்றைச் சாளர முறை (NSWS), இந்திய தொழில்துறை நில வங்கி, திட்டக் கண்காணிப்புக் குழு (PMG), அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை தாராளமயமாக்குதல், இந்திய காலணி மற்றும் தோல் மேம்பாட்டுத் திட்டம் (IFLDP) போன்றவை.மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள் / துறைகளில் திட்ட மேம்பாட்டுக் குழுக்கள் (PDCs) வடிவில் முதலீடுகளை விரைவாகக் கண்காணிப்பதற்கான அமைப்பு ரீதியான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கையை அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி சில முக்கியமான துறைகளைத் தவிர பெரும்பாலான துறைகள் தானியங்கி முறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு வரலாம்.அந்நிய நேரடி முதலீட்டில் கிட்டத்தட்ட 90% தானியங்கி முறையின் கீழ் பெறப்படுகிறது.அந்நிய நேரடி முதலீட்டு வரம்புகளை உயர்த்துவதன் மூலமும், ஒழுங்குமுறை தடைகளை நீக்குவதன் மூலமும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், வணிகச் சூழலை மேம்படுத்துவதன் மூலமும், இந்தியா தனது பொருளாதாரத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.
எளிதாக வர்த்தகம் செய்தல் மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அரசிடமிருந்து தொழில்துறைக்கு, (G2B) மற்றும் குடிமக்கள் நேரில் அணுகுவதை எளிமைப்படுத்தவும், சீரமைக்கவும், டிஜிட்டல் மயமாக்கவும், குற்றமற்றதாக்கவும், அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை, 42,000-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டிருப்பதுடன், 3,800-க்கும் மேற்பட்ட விதிகள் குற்றமற்றவை ஆக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கை அடிப்படையிலான ஆளுகையை மேம்படுத்துவதற்கும், சிறு குற்றங்கள் மற்றும் இணக்க அடிப்படையிலான சட்டங்கள் மற்றும் தேவைகளை குற்றமயமாக்குவதற்கும் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) சட்டம், 2023 அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த சட்டம் 19 அமைச்சகங்கள் / துறைகளால் நிர்வகிக்கப்படும் 42 சட்டங்களின் கீழ் 183 விதிகளை நீக்கியது.2019 அக்டோபரில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் வர்த்தகம் செய்தல் அறிக்கை (DBR), 2020-ல் இந்தியா 63-வது இடத்தில்உள்ளது. DBR இல் இந்தியாவின் தரவரிசை 2014-ல் 142-வது இடத்தில் இருந்து 2019-ல் 63-வது இடத்திற்கு முன்னேறி, 5 ஆண்டுகளில் 79 இடங்கள் முன்னேறியுள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT), நாட்டில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கான ஒரே இடமாக தேசிய ஒற்றை சாளர இணையதளத்தை (NSWS) உருவாக்கியுள்ளது. NSWS தளம் G2B சுற்றுச்சூழல் அமைப்புகளை நெறிப்படுத்துவதையும், இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவதை மேலும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த தளம் ஒரு தேசிய இணையதளம், பான் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் பதிவு மற்றும் மத்திய அரசு அளவில் 270-க்கும் அதிகமான G2B சேவைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம், G2B சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் பொறுப்புக்கூறல், தகவல் சமச்சீர் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.எனவே, தேவையான G2B சேவைகளைப் பெறுவதற்கு வணிகங்களுக்கான பல இடைமுகங்கள் மற்றும் பதிவுகளின் தேவையையும் இது நீக்குகிறது.அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகளில் தற்போதுள்ள அனுமதி அமைப்புகளை இந்த தேசிய இணையதளம் ஒருங்கிணைக்கிறது.மத்திய மற்றும் மாநில அரசுகள். தற்போது, 32 மத்திய அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் ஒற்றைச் சாளர அமைப்புகளின் ஒப்புதல்கள் NSWS வலைதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 277 மத்திய ஒப்புதல்கள் மற்றும் 2,977 மாநில ஒப்புதல்கள் NSWS மூலம் விண்ணப்பிக்கலாம். 653 மத்திய ஒப்புதல்கள் மற்றும் 6,198 மாநில ஒப்புதல்கள் தொடர்பான தகவல்கள் NSWS-இன், உங்கள் ஒப்புதலை அறிந்து கொள்ளுங்கள் (KYA) தொகுதி வழியாக தொழில்துறையினருக்கு கிடைக்கின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/DL
(Release ID: 2042306)
Visitor Counter : 62