உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காவல்துறையில் பெண்கள் நியமனத்தை அதிகரிக்க நடவடிக்கை: இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய்

Posted On: 06 AUG 2024 4:33PM by PIB Chennai

"காவல் துறை" என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் பட்டியல்-II-ல் இடம்பெற்றுள்ள ஒரு மாநிலப் பட்டியலாகும். பாலின சமநிலையை மேம்படுத்துவது உட்பட அதிக பெண் காவலர்களை நியமிப்பது மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களின் முதன்மையான பொறுப்பாகும். காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஆலோசனைகளை வழங்குகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு பெண் காவலரின் பிரதிநிதித்துவத்தை மொத்த எண்ணிக்கையில் 33% ஆக உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. காவலர்களை, உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு கூடுதல் பெண் காவலர்கள் /  உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களை உருவாக்க அனைத்து மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தது 3 பெண் உதவி ஆய்வாளர்கள், 10 பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். காவல் துறையில் பெண்கள் சேருவதற்கு, காவல் நிலையங்களில் பெண் காவலர்களுக்கு வீட்டுவசதி, மருத்துவ மற்றும் ஓய்வறை வசதிகள் போன்ற உகந்த பணிச்சூழலை உறுதி செய்யவும், பெண் காவலர்களுக்கான நலத்திட்டங்களை வலுப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நாட்டில் 1.1.2023 நிலவரப்படி,  2,63,762 பெண் காவலர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில்  25,334 பெண் காவலர்கள் உள்ளனர். 

இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மக்களவையில்   இன்று கேள்வி ஒன்றுக்கு  அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042133

***

IR/RS/DL


(Release ID: 2042300) Visitor Counter : 65