புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து எரிசக்தி உற்பத்தி
प्रविष्टि तिथि:
06 AUG 2024 2:57PM by PIB Chennai
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது,இது வழக்கமான நிலக்கரி-அனல் அடிப்படையிலான மின்சாரத்திலிருந்து எரிசக்தி பயன்பாட்டிற்கு எதிராக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க, தொழிற்சாலைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிப்பதாகும்.
30.06.2024 நிலவரப்படி, நாட்டின் மொத்த நிறுவப்பட்ட சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திறன் 85.47 ஜிகாவாட் ஆகவும், காற்றாலை மின்சார உற்பத்தி 46.65 ஜிகாவாட் ஆகவும் உள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042071
***
MM/AG/DL
(रिलीज़ आईडी: 2042289)
आगंतुक पटल : 125