கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
துறைமுகம் மூலம் வருவாய் ஈட்டுதல்
Posted On:
06 AUG 2024 1:40PM by PIB Chennai
பெரிய துறைமுக ஆணையம் மற்றும் சலுகையாளருக்கு இடையிலான வருவாய் பங்கு / ராயல்டி மீதான திறந்த போட்டி ஏல செயல்முறை மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சலுகை ஒப்பந்தத்தின் மூலம் பெரிய துறைமுகங்களில் குறிப்பிட்ட திட்டங்கள் / பெர்த்துகள் / டெர்மினல்களுக்கு தனியார் துறை பங்கேற்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. சலுகைக் காலம் முடிவடைந்த பின்னர், அந்த சொத்து துறைமுக ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். 2024-25 நிதியாண்டில் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மை திட்டங்களை வழங்குவதன் மூலம், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் (ரூ.7055 கோடி), தீன்தயாள் துறைமுகம் (ரூ.1880 கோடி), சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் (ரூ.1065 கோடி) என ரூ. 10,000 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. அதிக தன்னாட்சி, நெகிழ்வுத்தன்மை மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பெரிய துறைமுக பொறுப்பாட்சிகள் சட்டம், 1963-க்குப் பதிலாக, பெரிய துறைமுக ஆணையங்கள் சட்டம், 2021 இயற்றப்பட்டது, மாதிரி சலுகை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்தல் மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்களுக்கான கட்டண நிர்ணயத்திற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2042224)
Visitor Counter : 35