சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் 85.13 சதவீதம் அளவிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Posted On: 06 AUG 2024 2:43PM by PIB Chennai

2023-24-ம் நிதியாண்டில் தேசிய அளவில் 93.5 சதவீதம் அளவிற்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 2 வயது வரையிலான அனைத்து தகுதியான குழந்தைகளுக்கும் தடுப்பூசி அட்டவணையின்படி தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

 

இந்திரதனுஷ் இயக்கம், தீவிர இந்திரதனுஷ் இயக்கம் ஆகியவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களாகும். நோய்த்தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளில் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுகின்றன.

 

மாதிரி நோய்த்தடுப்பூசி மையங்களை அமைக்க மாநிலங்கள்/ யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. தேவைக்கேற்ப மாநிலங்களில் தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் மற்றும் சண்டிகர், லடாக் யூனியன் பிரதேசங்களில் மாதிரி நோய்த்தடுப்பூசி மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

2023-24-ம் ஆண்டில்  தமிழ்நாட்டில்  85.13 சதவீதம் அளவிற்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

இத்தகவலை  மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்  திரு பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042058

***

IR/RS/KR



(Release ID: 2042147) Visitor Counter : 26