எரிசக்தி அமைச்சகம்

24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய இலக்கு

Posted On: 05 AUG 2024 3:46PM by PIB Chennai

மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இன் விதி (10)-இன்படி, மின் பகிர்மான உரிமதாரர் அனைத்து நுகர்வோருக்கும் 24x7 மின்சாரம் வழங்க வேண்டும். இருப்பினும், விவசாயம் போன்ற சில வகை நுகர்வோர்களுக்கு குறைந்த விநியோக நேரத்தை ஆணையம் குறிப்பிடலாம். இந்த விதிகள்  அனைத்து மாநிலங்களுக்கும், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.

 

அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற இலக்கை அடைய மாநிலங்களுக்கு  ஆதரவளிப்பதற்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி, ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் , பிரதமரின் சௌபாக்யா போன்ற திட்டங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தில் விநியோக முறையை வலுப்படுத்த ரூ.11,391 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தீன் தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின் கீழ் மொத்தம் 2,583 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன, சௌபாக்யா திட்டத்தின் கீழ் 17,30,708 வீடுகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

 

மேலும், மத்திய அரசு, நிதி ரீதியாக நிலையான மற்றும் செயல்பாட்டு ரீதியாக திறமையான விநியோகத் துறையின் மூலம் நுகர்வோருக்கு மின்சார விநியோகத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதுப்பிக்கப்பட்ட பகிர்மானத் துறை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நிதியாண்டு 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்திய அரசிடமிருந்து ரூ.97,631 கோடி மொத்த பட்ஜெட் ஆதரவுடன் ரூ.3,03,758 கோடி செலவில் இந்தத் திட்டம் உள்ளது. ரூ. 4,181 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் விநியோக உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் பணிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பிரதமரின்  ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பி.எம்-ஜன்மன்) திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாதிப்புக்குள்ளாகக்கூடிய அனைத்து பழங்குடியின குழுக்களின் வீடுகளிலும்  புதுப்பிக்கப்பட்ட பகிர்மானத் துறை திட்டத்தின் கீழ் மின்சார தொகுப்பு இணைப்புக்கான திட்டப் பணிகள் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன. இன்றுவரை, ஜார்கண்ட் மாநிலத்தில் 9,134 வீடுகளுக்கு மின்மயமாக்குவதற்காக ரூ.53.39 கோடி மதிப்பிலான பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மத்திய மின்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக் மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041632

 

BR/KR

 

***

 



(Release ID: 2042021) Visitor Counter : 22