இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதியுதவி
Posted On:
05 AUG 2024 4:30PM by PIB Chennai
'விளையாட்டு' மாநிலம் சார்ந்ததாக இருப்பதால், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உட்பட விளையாட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு முதன்மையாக மாநில / யூனியன் பிரதேச அரசுகளிடம் உள்ளது. அவற்றின் முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.
இருப்பினும், கேலோ இந்தியா திட்டத்தின் "விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்துதல்" என்ற பகுதியின் கீழ், விளையாட்டு வளாகம், செயற்கை இழை தடகளப் பாதைகள், செயற்கை ஹாக்கி மைதானங்கள், செயற்கை புல்தரை கால்பந்து மைதானங்கள், பல்நோக்கு அரங்குகள், நீச்சல் குளங்கள் போன்ற அடிப்படை விளையாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், விளையாட்டு உபகரணங்களுக்கும் இந்த அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது.
தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியின் கீழ், நாடு முழுவதும் விளையாட்டு வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் அரசு உதவி செய்கிறது.
இதுவரை, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பல்வேறு பிரிவுகளில் 343 விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041698
***
SMB/AG/DL
(Release ID: 2041866)