சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராம்சார் தளங்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 15 இடங்கள் இடம் பெற்றுள்ளன

Posted On: 05 AUG 2024 12:14PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநில ஈரநில ஆணையத்தின் அறிக்கையின்படி, போபாலில் உள்ள போஜ் ஈரநிலம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் ராம்சார் மாநாட்டு பட்டியலில் இருந்து நீக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை.

 

  • , சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ் ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017- நாடு முழுவதும் உள்ள ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பாக அறிவிக்கை செய்துள்ளது.இவ்விதிகள், திடக்கழிவுகளைக் கொட்டுதல், தொழிற்சாலைகள், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் மற்றும் இதர குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன. மேலும் போபாலின் போஜ் ஈரநிலத்தில் ஈரநில (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 அமல்படுத்துவதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு, 16-வது மார்ச் 2022 மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மத்திய பிரதேசம் உள்ளிட்ட நாட்டில் உள்ள ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக, நீர்வாழ் சூழல் அமைப்புகள் பாதுகாப்புக்கான தேசிய திட்டம் என்ற மத்திய அரசு திட்டத்தை, மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளுக்கிடையேயான செலவுப் பகிர்வு அடிப்படையில் மத்திய வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கழிவுநீரைத் தடுத்து வழிப்படுத்துதல் மற்றும் சுத்திகரித்தல், கரையோரப் பாதுகாப்பு, ஏரிக்கரை மேம்பாடு, அந்த இடத்திலேயே சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை இந்தத் திட்டம் உள்ளடக்கியது. தூர்வாருதல் மற்றும் களை எடுத்தல், மழைநீர் மேலாண்மை, உயிரி சுத்திகரிப்பு, நீர்ப்பிடிப்பு பகுதி சுத்திகரிப்பு, ஏரிகளை அழகுபடுத்துதல், நில அளவை மற்றும் எல்லை நிர்ணயம், உயிரி வேலி அமைத்தல், மீன்வள மேம்பாடு, களை கட்டுப்பாடு, உயிர்ப்பன்மை பாதுகாப்பு, கல்வி மற்றும் விழிப்புணர்வு, சமுதாய பங்கேற்பு போன்றவையும் இதில் அடங்கும்.

 

மத்தியப் பிரதேச மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், இந்த அமைச்சகம் மொத்தம் ரூ. 432 செலவில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. 2018-2019 ஆம் ஆண்டில் போபாலில் உள்ள போஜ் ஈரநிலத்தைப் பாதுகாக்க ரூ.259-லட்சத்திலிருந்து ரூ.200 லட்சம் விடுவிக்கப்பட்டது.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தளங்களின் மாநில வாரியான விவரங்கள்  கொடுக்கப்பட்டுள்ளன.

annexure

கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கை 40 ஆகும். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 15 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

கூத்தங்குளம் பறவைகள் சரணாலயம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காரிக்கிளி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள், பள்ளிக்கரணை சதுப்புநிலக் காப்புக் காடு, மன்னார் வளைகுடா கடர்சார் உயிர்க் கோளப்பகுதி, வெம்பன்னூர் ஈரநில வளாகம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் தேரூர் ஈரநில வளாகம், வடுவூர் பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், லாங்வுட்சோழா காப்புக்கூடு ஆகியவை  இந்த 15 இடங்களாகும்.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

------

(Release ID: 2041456)

PKV/KPG/KR


(Release ID: 2041669) Visitor Counter : 71