சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நீதித்துறையின் சுமையைக் குறைப்பதற்கும், அதன் மூலம் மக்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்குவதற்கும் மாற்றுத் தீர்வு வழிமுறைகளைப் பயன்படுத்துதல்

Posted On: 02 AUG 2024 2:41PM by PIB Chennai

மத்தியஸ்தம் மற்றும் சமரசம் உள்ளிட்ட மாற்று தகராறு தீர்வு வழிமுறைகளை அரசு ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் இந்த சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான வழக்கமான முறைகளுக்கு சிறந்த மாற்றை வழங்கும் திறன் கொண்டவை. மாற்றுத்தீர்வு வழிமுறை எனப்படும் ஏடிஆர், நீதித்துறையின் சுமையை குறைக்கும் என்றும் அதன் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை இயற்றுதல் ஆகியவை இந்த விஷயத்தில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய முயற்சிகளில் அடங்கும்.

 

நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996, 2015, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் படிப்படியாக திருத்தம் செய்யப்பட்டு, தற்போது ஏற்பட்டுள்ள சமரச நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், தகராறுகளுக்கு தீர்வு காணும் அமைப்பாக மத்தியஸ்தம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வணிக நீதிமன்றங்கள் சட்டம், 2015, நிறுவனத்திற்கு முன் சமரசம் மற்றும் தீர்வு (PIMS) அமைப்புக்கு வகை செய்யும் வகையில் 2018-ம் ஆண்டு திருத்தப்பட்டது.

இது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மத்தியஸ்தம் மூலம் வணிக தகராறுகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நிறுவன ரீதியான நடுவண் தீர்ப்பாயத்தை எளிதாக்குவதற்காக ஒரு சுதந்திரமான, தன்னாட்சி பெற்ற மற்றும் உலகத்தரம் வாய்ந்த அமைப்பை உருவாக்கும் நோக்கத்திற்காக இந்திய சர்வதேச நடுவண் மையத்தை (மையம்) நிறுவவும், இணைக்கவும் இந்திய சர்வதேச நடுவண் மையம் சட்டம், 2019 இயற்றப்பட்டது.

 

இந்தத் தகவலை சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வழங்கினார். திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040661

 

***

PLM/RS/KV



(Release ID: 2041042) Visitor Counter : 29