சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிப்படைத்தன்மை, பொதுமக்களை சென்றடைதல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் அமைப்பை எளிதாக்குவதன் மூலம் நியாயமான நீதி வழங்கல் முறைக்கு உதவுதல்

Posted On: 02 AUG 2024 2:40PM by PIB Chennai

நீதித்துறை, சட்ட அமலாக்க அதிகாரிகள், வழக்குத் தொடரும் முகமைகள் மற்றும் சட்ட உதவி ஆணையங்கள் என பல தரப்பினரின் பங்களிப்பை நீதி வழங்கல் அமைப்பு கொண்டுள்ளது. பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்காக இந்த பங்குதாரர்கள் தகராறுகளைத் தீர்ப்பதற்கும், சட்டங்களை அமல்படுத்துவதற்கும், நீதியை நிர்வகிப்பதற்கும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

வெளிப்படைத் தன்மை, மக்களைச் சென்றடைதல் மற்றும் சமுதாய ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், நியாயமான நீதி வழங்கல் முறைக்கு உதவும் சூழலமைப்புக்கு வழிவகை செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள சில முன்முயற்சிகள் வருமாறு:-

நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான தேசிய இயக்கத்தை அரசு 2011 ஆம் ஆண்டில் அமைத்தது. இந்த அமைப்பில் தாமதம் மற்றும் நிலுவைதயைக்  குறைப்பதன் மூலம் அணுகலை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் மூலம் பொறுப்புணர்வை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் இது அமைக்கப்பட்டது.

மின்னணு நீதிமன்றங்களை இலக்கு முறையில் இயக்கும் திட்டத்தின் கீழ், இந்திய நீதித்துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வழக்குகளின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் இத்திட்டம் தொழில்நுட்ப உதவியுடன் செயல்பத்தப்படுகிறது.

தற்போது, கணினிமயமாக்கப்பட்ட மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் 18,735 உள்ளன. 99.4% நீதிமன்ற வளாகங்களுக்கு டபிள்யூ ஏ என் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 3,240 நீதிமன்ற வளாகங்கள் மற்றும் 1,272 தொடர்புடைய சிறைச்சாலைகளுக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 30.04.2024 நிலவரப்படி, வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடுபவர்களுக்கு கமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை எளிதாக்குவதற்காக நீதிமன்ற வளாகங்களில் 1050 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 31.05.2024 நிலவரப்படி, 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 28 மெய்நிகர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 5.08 கோடி வழக்குகளை கையாண்டு, ரூ .561.09 கோடிக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்துள்ளன.

ரூ.7,210 கோடி மதிப்பீட்டிலான மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 13.09.2023 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் ஆதாயங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது, நீதித்துறைக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதே மூன்றாம் கட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

லிருந்து தற்போது 1114 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மற்றும் பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு அதிகரித்துள்ளது:

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பாலியல் பலாத்காரம் மற்றும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உள்ளிட்ட விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்த தகவலை சட்டம் மற்றும் நீதித் துறை  இணை அமைச்சர், திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040660

-------------

PLM/RS/KV/DL


(Release ID: 2040903) Visitor Counter : 58