நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ன் விதி 3-ல் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
02 AUG 2024 12:56PM by PIB Chennai
சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011-ன் விதி 3-ல் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை நீட்டித்துள்ளது. கருத்துக்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி 29.07.2024 ஆகும், இது இப்போது 30.08.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ன்படி, உற்பத்தியாளர், பேக்கிங் செய்பவர் இறக்குமதியாளர் ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி, பிறந்த நாடு, பொருளின் பொதுவான பெயர், நிகர அளவு, உற்பத்தி செய்யப்பட்ட மாதம் மற்றும் ஆண்டு, அதிகபட்ச விற்பனை விலை, ஒரு பொருள் மனித நுகர்வுக்கு தகுதியற்றதாக இருந்தால், தேதிக்கு முன் பயன்படுத்துதல் போன்ற கட்டாயத் தகவல்களை அறிவிக்க வேண்டும். நுகர்வோர் நலன் கருதி பொட்டலமிடப்பட்ட அனைத்து பொருட்களிலும் நுகர்வோர் பராமரிப்பு விவரங்கள் முதலியன இடம் பெறவேண்டும்.
இருப்பினும், 2011 ஆம் ஆண்டு விதி 3-ன், சிமெண்ட், உரம் மற்றும் வேளாண் பண்ணை விளைபொருட்கள் நீங்கலாக 25 கிலோ அல்லது 25 லிட்டருக்கு மேல் உள்ள பொட்டலப் பொருட்களுக்கு பொருந்தாது. ஏனெனில், சில்லறை விற்பனைக்கான பொட்டலப் பொருட்கள் 25 கிலோவுக்கு மிகாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்கள் உட்பட சந்தையில் வளர்ந்து வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பொட்டலப் பொருட்களுக்கு ஒரே மாதிரியான தன்மையை நிறுவ சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ல் திருத்தம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.
துறைக்கு பல்வேறு ஆலோசனைகள் கருத்துகள் கிடைத்துள்ளன, அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. பல்வேறு கூட்டமைப்புகள், சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள், பின்னூட்டங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு இத்துறை கோரிக்கைகளைப் பெற்று வருகிறது.
கருத்துகளை ashutosh.agarwal13[at]nic[dot]in,dirwmca[at]nic[dot]in,mk.naik72[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கலாம். முன்மொழியப்பட்ட திருத்தத்தை இங்கு வழங்கப்பட்ட இணைப்பின் மூலம் அணுகலாம்
httpsconsumeraffairs.nic.insitesdefaultfilesfile-uploadslatestnewsAmend%20Rule%203%20of%20the%20Legal%20Metrology%20%28Packaged%20Commodities%29%20Rules%2C%202011.pdf
இவ்விதிகள், தொழிற்சாலை நுகர்வோர் அல்லது நிறுவன நுகர்வோர்களுக்கான பொட்டலப் பொருட்கள் தவிர, சில்லறை விற்பனையில் விற்கப்படும் அனைத்து பொட்டலப் பொருட்களுக்கும் பொருந்தும்.
இந்த திருத்தப்பட்ட விதி தொகுக்கப்பட்ட பொருட்களுக்கு ஒரே மாதிரியான தரநிலைகள் தேவைகளை நிறுவவும், பல்வேறு பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளில் நிலைத்தன்மை மற்றும் நியாயத்தை ஊக்குவிக்கவும் உதவும். முழுமையான தகவல்களின் அடிப்படையில் நுகர்வோர் தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ள உதவும்.
---
PKV/KPG/KV
(रिलीज़ आईडी: 2040692)
आगंतुक पटल : 122