எரிசக்தி அமைச்சகம்
செயல்திறன், அடைதல் மற்றும் வர்த்தக (பிஏடி) திட்டம்
Posted On:
29 JUL 2024 4:09PM by PIB Chennai
செயல்திறன் அடைதல் மற்றும் வர்ததக (பிஏடி) திட்டம் 2012 இல் தொடங்கப் பட்டது. இன்று வரை, பதின்மூன்று துறைகளை சேர்ந்த 1333 நுகர்வோர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஆற்றல் சேமிப்பு இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகள் மூன்றாண்டு காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2022-23 ஆம் ஆண்டில், செயல்திறன் அடைதல் மற்றும் வர்ததக திட்டத்தின் கீழ் மேற்கூறிய நிறுவனங்கள் 25.77 மில்லியன் டன் எண்ணெய் சமமான (MTOE) ஆற்றலை சேமித்துள்ளன. இது அவர்களின் மொத்த ஆண்டு ஆற்றல் நுகர்வில் 8 விழுக்காடு ஆகும்
இன்றுவரை நாட்டில் 11,127 பேர் ஆற்றல் தணிக்கையாளர்களாக சான்றிதழ் பெற்றுள்ளனர். தற்போது, அனல் மின் நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு மற்றும் எஃகு, மற்றும் ஜவுளித் தொழில்கள் உள்ளிட்ட பதின்மூன்று ஆற்றல் மிகுந்த துறைகளின் கீழ் நியமிக்கப்பட்ட நுகர்வோர் செயல்திறன் அடைதல் வர்த்தக திட்டத்தின் கீழ் உள்ளனர்.
2023 ஜூன்மாதம் கார்பன் கடன் வத்தக திட்டம் (சிசிடிஎஸ்) அறிமுகப்படுத்தப் பட்டதன் மூலம், எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு மற்றும் எஃகு ஆலைகள் மற்றும் ஜவுளித் தொழில்கள் உள்ளிட்ட பசுமை வாயுக்களை வெளியேற்றும் இந்த தீவிரமான ஒன்பது துறைகள் படிப்படியாக 2026-27 நிதியாண்டில் செயல்திறன் அடைதல் மற்றும் வர்த்தக திட்டத்திற்கு மாறும். அனல் மின் நிலையங்கள் உட்பட மீதமுள்ள நான்கு ஆற்றல் மிகுந்த துறைகள் இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து உள்ளடக்கப்படும். ஆற்றல் தணிக்கை மூலம் புதிய ஆற்றல் மிகுந்த தொழில்களைச் சேர்ப்பது செயல்திறன் அடைதல் மற்றும் வர்த்தக திட்டத்தின் கீழ் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.
இந்த தகவலை மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் நாயக் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்
*****
(Release ID: 2040434)
Visitor Counter : 48