பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பழங்குடியின மாணவர்களின் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கொள்கை வெளியிடப்பட்டது
Posted On:
01 AUG 2024 12:53PM by PIB Chennai
பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ், செயல்படும் தன்னாட்சி அமைப்பான தேசிய பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்விச் சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளித் திட்டத்தை நிர்வகிக்கவும், செயல்படுத்தவும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தேர்வு செய்வது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பணியாளர் தேர்வில் ஹிந்தி மொழியில் தேர்வு, தகுதியாக வைக்கப்பட்டது. தேசிய பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்விச்சங்கம் அறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநிலங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு உட்பட்டு இயன்றவரை தங்கள் சொந்த மாநிலங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். உள்ளூர் மொழிகளை அறிய, மாநில கல்விச் சங்கங்கள் மூலம் உள்ளூர் மொழிகளில் அமர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, 2022-23 முதல் 2026 -27ம் ஆண்டு வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளிலும் 38,480 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்க ஒப்புதல் அளித்தது. தற்போது தேசிய பழங்குடியிர் மாணவர்களுக்கான கல்விச்சங்கம் மூலம் 8000-க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் ஸ்ரீ துர்கதாஸ் யூகி இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2040018)
IR/RS/KR
(Release ID: 2040131)
Visitor Counter : 60