உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்

Posted On: 31 JUL 2024 4:38PM by PIB Chennai

நாட்டில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகள் குறித்த தரவுகளை தொகுத்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கடைசியாக 2022-ம் ஆண்டு இது வெளியிடப்பட்டது. 2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு 796 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 814 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 1005 வழக்குகளும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு 3 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 4 வழக்குகளும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன.   2021-ம் ஆண்டு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு  எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த போது இதைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039655

*** 

IR/KPG/DL


(Release ID: 2039884) Visitor Counter : 62