திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் இந்தியா டிஜிட்டல் மையத்தில் 88 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்
प्रविष्टि तिथि:
31 JUL 2024 1:47PM by PIB Chennai
2023, செப்டம்பரில் திறன் இந்தியா டிஜிட்டல் மையம் என்ற தளத்தை தொடங்கி திறன் வளர்ச்சிக்கான சூழலை மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது. இந்தியாவின் திறன் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தளமாக இது செயல்படுகிறது. திறன் விரிவாக்கம், தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகள், வேலைவாய்ப்புகள், தொழில் முனைவுக்கான ஆதரவு போன்றவற்றை எளிதில் கிடைக்கச்செய்வது இதன் முதன்மை நோக்கமாகும் என்று மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், 2024, ஜூன் நிலவரப்படி, திறன் இந்தியா டிஜிட்டல் மையத்தில் 88 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்றார். 9.59 லட்சம் செல்பேசி செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும், இணையதள வகுப்புகளுக்காக 7.63 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் திறன் மேம்பாட்டிற்கு உதவியாக பாரத்ஸ்கில்ஸ் இணையப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 553 இ-புத்தகங்கள், 397 வினா வங்கிகள், 6201 மின்னணு வழியாக கற்றல் வீடியோக்கள், 190 கல்விக்கான தகவல்கள் 12 பிராந்திய மொழிகளில் கிடைக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039515
***
SMB/RS/KR
(रिलीज़ आईडी: 2039673)
आगंतुक पटल : 116