தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கடந்த 2 மாதங்களில் இஎஸ்ஐசி நிறுவனம் 1221 மருத்துவர்களை நியமித்துள்ளது

Posted On: 31 JUL 2024 11:52AM by PIB Chennai

சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 1221 மருத்துவர்களை நியமிக்க தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. 860 பொதுப் பணி மருத்துவ அலுவலர்கள், 330 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 31 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், செவிலியர் பணியிடங்களில் காலியாக உள்ள 1930 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு, விரைவில் ஆட்சேர்ப்பு பணிகள் முடிக்கப்படும்.

 

தொழிலாளர் காப்பீட்டுக் கழகம்,  20 மின்துறை இளநிலை பொறியாளர்கள், 57 சிவில் இளநிலை பொறியாளர்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையை முடித்துள்ளது. யுபிஎஸ்சியின் பரிந்துரையின் பேரில் நியமனக் கடிதங்கள் இந்த மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

 

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் மாநில காப்பீட்டுச் சட்டம், 1948-ல் பொதிந்துள்ள சமூக காப்பீட்டின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும். பரந்து விரிந்துள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், மருந்தகங்கள் வாயிலாக, காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு பணப்பயன்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உட்பட சமூகப் பாதுகாப்பு பலன்களை முழுமையாக வழங்கி வருகிறது.

***

(Release ID: 2039396)

PKV/RR/KR



(Release ID: 2039521) Visitor Counter : 34