வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வழங்கல் தொடர் கவுன்சிலின் துணைத்தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
Posted On:
31 JUL 2024 11:05AM by PIB Chennai
குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வழங்கல் தொடர் உறுதிப்பாடு தொடர்பான இந்தியா- பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் கீழ், 3 வழங்கல் தொடர் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவும், அமெரிக்கா, ஜப்பான், கொரியா குடியரசு, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி உள்ளிட்ட 13 நாடுகளும் இணைந்து இந்த அமைப்புகளை உருவாக்கியுள்ளன. வழங்கல் தொடர் கவுன்சிலின், நெருக்கடி நிர்வாக வலைப்பின்னல், தொழிலாளர் உரிமைகள் ஆலோசனை வாரியம் என்பவை அந்த அமைப்புகள். இந்தப் பிராந்தியத்தில் வழங்கல் தொடரை வலுப்படுத்த கூட்டாண்மை நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கு இந்த நடவடிக்கை முக்கியமானதாகும்.
இவற்றின் தொடக்க நிகழ்வு, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் உரிமைகளை வலுப்படுத்தும் அதே சமயம், பொருளாதார வளமைக்கு ஏற்படும் இடையூறுகளை களைவதற்கான சிறந்த தயாரிப்பு பணிகளில் கூட்டாக செயல்படுவது என்று 14 உறுப்பு நாடுகளும் உறுதியேற்றன.
இந்தக் கூட்டத்தின் போது, 3 அமைப்புகளுக்கும் தலைவர்கள், துணைத்தலைவர்கள். இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், துணைத்தலைவர்கள் பற்றிய விவரம்:
- வழங்கல் தொடர் கவுன்சில்: தலைவர்- அமெரிக்கா; துணைத்தலைவர் -இந்தியா
- நெருக்கடி நிர்வா வலைப்பின்னல்: தலைவர் -கொரியா குடியரசு; துணைத்தலைவர் -ஜப்பான்
- தொழிலாளர் உரிமை ஆலோசனை வாரியம்: தலைவர்- அமெரிக்கா; துணைத்தலைவர் -ஃபிஜி
இந்தக் கூட்டத்தில் வழங்கல் தொடர் கவுன்சிலின் பணி வரம்புகள் ஏற்கப்பட்டு தொடக்க நிலையில் முன்னுரிமைப் பணிகள் விவாதிக்கப்பட்டன. 2024, செப்டம்பர் மாதத்தில் வாஷிங்டனில் நடைபெற உள்ள வழங்கல் தொடர் உச்சி மாநாட்டிற்கு இடையே முதல் முறையாக நடைபெறும் நேரடி கூட்டத்தில் மேலும் இவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
இந்தியா- பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் வழங்கல் தொடர் உறுதி ஒப்பந்தம் 2023, நவம்பர் மாதத்தில் வாஷிங்டனில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலும் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் கையெழுத்திட்டனர். 2024, பிப்ரவரி மாதத்தில் ஏற்பளிக்கப்பட்ட பின், ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039370
---------------
SMB/RS/KR
(Release ID: 2039518)
Visitor Counter : 72