கூட்டுறவு அமைச்சகம்
பொது சேவை மைய மின் ஆளுமை சேவையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
30 JUL 2024 4:35PM by PIB Chennai
கூட்டுறவு அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நபார்டு வங்கி மற்றும் சி.எஸ்.சி மின் ஆளுமை சேவை இந்தியா லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் நாட்டின் கிராமப்புறங்களில் வங்கி, காப்பீடு, ஆதார் பதிவு / புதுப்பித்தல், சுகாதார சேவைகள், வேளாண் சேவைகள் உள்ளிட்ட பொதுச் சேவை மையங்கள் வழங்கும் 300 க்கும் மேற்பட்ட மின்னணு சேவைகளை வழங்க உதவும்.
பொதுச் சேவை மையங்களாக செயல்படும் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள், பொதுச் சேவை மைய இணையதளம் மூலம் குடிமக்களுக்கு கீழ்க்கண்டவை உட்பட பல்வேறு மின்னணு சேவைகளை வழங்க முடியும்:
பிரமரின் நலத்திட்டங்கள்:ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் கிசான் மந்தன், பிரதமரின் ஃபசல் பீமா, வேளாண் கடன் அட்டை, இ-ஷ்ரம் பதிவுகள் போன்றவை.
மத்திய அரசு சேவைகள்:ஆதார், பான் கார்டு, ஜீவன் பிரமான், பாஸ்போர்ட், தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் செலுத்தும் சேவைகள், வருமான வரி கணக்கு தாக்கல் போன்றவை.
மாநில அரசு சேவைகள்:மிமின்னணு மாவட்ட சேவைகள்,பொது விநியோக சேவைகள் , நகராட்சி சேவைகள் போன்றவை.
நிதி சேர்க்கை சேவைகள்:வங்கி, கடன், காப்பீடு, ஓய்வூதியம், டிஜிபே, பாஸ்ட் டாக் போன்றவை.
ஆதார் தொடர்பான சேவைகள்
விவசாய சேவைகள்
மின்னணு போக்குவரத்து மற்றும் திறன் வாய்ந்த தயாரிப்புகள்
பிற சேவைகள்
ரயில்வே மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பொது சேவை சேவை மையத்தின் டிஜிட்டல் சேவா தளத்தில் இதற்கான வசதி உள்ளது, இதன் மூலம் பொது சேவை மையமாக செயல்படும் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புறங்களில் உள்ள குடிமக்களுக்கு இந்த சேவைகளை விரிவுபடுத்த முடியும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039070
***
BR/RR
(Release ID: 2039465)
Visitor Counter : 52