கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகத்தின் நிர்மாணம்

Posted On: 30 JUL 2024 4:35PM by PIB Chennai

கூட்டுறவுத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்வியையும், பயிற்சியையும் வழங்குவதற்கும், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், இணைந்த நிறுவனங்களின் வலையமைப்பின் மூலம் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கும், தேசிய அளவிலான கூட்டுறவு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு சம்பந்தமாக  கூட்டுறவு அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

மேற்கண்ட நோக்கத்தை அடைய, உத்தேசிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்திற்கான வரையறைகளை உருவாக்க மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநில அரசுகள், தேசிய கூட்டுறவு சங்கங்கள் / சம்மேளனங்கள், கூட்டுறவுக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் விரிவான கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் அதன் செலவுகளைச் சமாளிப்பதில் செயல்பாட்டு ரீதியாக தன்னிறைவு பெறுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படுவதுடன், அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு கூட்டுறவுத் துறையில் பயிற்சி பெற்ற மனிதவளத்தை நிலையான, போதுமான மற்றும் தரமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் கல்வி மற்றும் பயிற்சிக்கு விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கும். தொழில்முறை மனிதவளத்தை வழங்குதல் மற்றும் தற்போதுள்ள பணியாளர்களின் திறன் மேம்பாடு ஆகியவை கூட்டுறவுத் துறை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பெரிய பங்களிப்பை வழங்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

 

***

(Release ID: 2039069)

BR/KR

 


(Release ID: 2039463)