உள்துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை
Posted On:
30 JUL 2024 4:32PM by PIB Chennai
பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளவதில்லை என்ற கொள்கையை அரசு கொண்டுள்ளது. பயங்கரவாத சூழலை தகர்ப்பது அரசின் அணுகுமுறையாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அமைதியும், நிலைத்தன்மையையும் உருவாக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உத்திகள் வருமாறு:
- பயங்கரவாதிகளுக்கும், ஆதரவு அமைப்புகளுக்கும் எதிராக பயனுள்ள, தொடர்ச்சியான, நீடித்த நடவடிக்கைகள்.
- முழு அரசு அணுகுமுறையைப் பயன்படுத்தி பயங்கரவாத சூழலை அகற்றுதல்.
- பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்தல்; போன்ற பயங்கரவாத நிதி ஆதாரங்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்தல், தேச விரோத அமைப்புகளுக்கு தடை விதித்தல்.
- தடுப்பு நடவடிக்கைகளில் பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களை அடையாளம் காணுதல், பயங்கரவாதத்திற்கு உதவும், உடந்தையாக இருக்கும் அவர்களின் வழிமுறைகளை அம்பலப்படுத்த விசாரணைகளைத் தொடங்குதல்.
- ஊடுருவலைத் தடுக்க பலவகை உத்தி.
- தீவிரவாத தடுப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல்.
- பாதுகாப்பு உபகரணங்களை நவீனப்படுத்துவதிலும் வலுப்படுத்துவதிலும் சிறப்பு கவனம் செலுத்துதல்.
- முக்கியமான இடங்களில் 24 மணி நேரமும் காவலர்கள்.
- பயங்கரவாத அமைப்புகளால் ஏற்படும் சவால்களை சமாளிக்க தீவிர சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகள்.
- ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் அனைத்து பாதுகாப்புப் படைகளிடையே, நிகழ்நேர அடிப்படையில் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
- பகலிலும், இரவிலும் தீவிர கண்காணிப்பு.
மேற்கூறிய உத்திகளாலும், நடவடிக்கைகளாலும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை குறைய வழிவகுத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:
சம்பவங்கள்
|
2018
|
2023
|
2024 (ஜூலை 21, 24 வரை)
|
திட்டமிட்ட கல்வீச்சு
|
1328
|
00
|
00
|
திட்டமிட்ட ஹர்த்தால்
|
52
|
00
|
00
|
பயங்கரவாத சம்பவங்கள்
|
228
|
46
|
11
|
என்கவுண்டர்கள்
|
189
|
48
|
24
|
பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு
|
91
|
30
|
14
|
பொதுமக்கள் உயிரிழப்பு
|
55
|
14
|
14
|
(ஆதாரம்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம்)
இத்தகவலை உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
SMB/RS/KR/DL
(Release ID: 2039228)
Visitor Counter : 59