குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆகஸ்ட் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டிற்கு குடியரசுத் தலைவர் தலைமை தாங்குகிறார்

प्रविष्टि तिथि: 30 JUL 2024 5:52PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் 2024, ஆகஸ்ட் 2,3 ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டிற்கு குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு தலைமை தாங்குகிறார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறும் முதலாவது ஆளுநர்கள் மாநாடு இதுவாகும்.

இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர். குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய உள்துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், கல்வி, பழங்குடியினர் நலன், தகவல் மற்றும் ஒளிபரப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள், நித்தி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி மற்றும்  துணைத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை செயலகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள்   பங்கேற்க உள்ளனர்.

மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், முன்னோடி மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039155

***

IR/AG/DL


(रिलीज़ आईडी: 2039223) आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Punjabi , Telugu , Kannada