சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 88 சதவீதம் அதிகரித்து தற்போது 731 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன

Posted On: 30 JUL 2024 4:18PM by PIB Chennai

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளதுடன், எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரித்துள்ளது.  2014-ம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731-ஆக 88 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, தற்போது 118 சதவீதம் அதிகரித்து 1,12,112 ஆக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 31,185 ஆக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை தற்போது 72,627 ஆக 133% அதிகரித்துள்ளது.

கடந்த 2021-22-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 48,212 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 28,260 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 43,915 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 17,858 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. 2022-23-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 51,912 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 30,211 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன.  தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 44,365 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 19,362 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன.

2023-24–ம் ஆண்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில்  56,300 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 33,416 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 52,640 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 21,418 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன.

இத்தகவலை மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தபோது, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039047

 

******

IR/AG/KR/DL


(Release ID: 2039148) Visitor Counter : 98