தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வடகிழக்கு மாநிலங்களில் இஎஸ்ஐசி மருத்துவமனைகளும் மருத்துவ மையங்களும்

Posted On: 29 JUL 2024 6:59PM by PIB Chennai

அசாம் மாநிலத்தில் பெல்டோலாவிலும் (குவஹாத்தி), தின்சுகியாவிலும் இரண்டு ஊழியர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தால் (இஎஸ்ஐசி) நடத்தப்படும் மருத்துவமனைகள் உள்ளன. அங்கு மொத்தம் 41 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர, வடகிழக்கு பிராந்தியத்தில் பாபும்பரே (அருணாச்சல பிரதேசம்), தர்ரங் (அசாம்), இம்பால் மேற்கு (மணிப்பூர்) ஆகிய இடங்களில் தலா ஒன்று என 3 தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் நடத்தப்படும் மருத்துவ மையமும் கிளை அலுவலகங்களும் உள்ளன.

மேலும், இஎஸ்ஐ திட்டத்தின் (இஎஸ்ஐஎஸ்) கீழ் மாநிலங்களால் நடத்தப்படும் 41 இஎஸ்ஐ மருத்துவ மையங்கள் உள்ளன.

வடகிழக்கு பிராந்தியத்தில் மருத்துவ சேவைகளையும் உள்கட்டமைப்பையும் விரிவுபடுத்த இஎஸ்ஐசி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும், மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான மைய அமைப்புகளாக இந்த மையங்களை உருவாக்கவும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தால் நடத்தப்படும் அனைத்து ஒரு மருத்துவர் மையங்களையும் இரண்டு மருத்துவர் மையங்களாகத் தரம் உயர்த்த 24.06.2024 அன்று தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவர்-நோயாளி விகிதத்தை மேம்படுத்துவதற்கான நடவடக்கையும் இதில் அடங்கும்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக பயனாளிகளுக்கு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் அசாமில் 29 மருத்துவமனைகள், சுகாதார மையங்களும், மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுராவில் தலா ஒன்றும் அடங்கும்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 (Release ID: 2038692)

***



(Release ID: 2038928) Visitor Counter : 32