பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
குடிமைப்பணி பயிற்சி மையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ்
Posted On:
29 JUL 2024 6:53PM by PIB Chennai
நாட்டில் உள்ள 150 குடிமைப்பணி பயிற்சி மையங்களுக்கு தேசிய தரச்சான்றிதழ் (NSCTI) வழங்கப்படவுள்ளதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று அவர், கர்மயோகி இயக்கத்தின் கீழ், குடிமைப் பணி திறன் உருவாக்கத்திற்கான தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பேசிய அமைச்சர், கர்ம யோகி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்கள் 31 லட்சம் பேர் பயிற்சி பெற்று வருவதாக கூறினார். பயிற்சியின் தரத்தை நிலைப்படுத்தி, இணக்கமாக்குவதே குடிமைப்பணி பயிற்சி மையங்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குடிமைப் பணி பயிற்சி மையங்களுக்கு தேசிய அளவில் தர நிர்ணயம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சி என்று குறிப்பிட்ட திரு ஜிதேந்திர சிங் நாட்டில் தற்போது 300-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் திறன் உருவாக்க ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக கூறினார்.
ஒருங்கிணைந்த அரசு இணையதள பயிற்சி தளத்தில் கற்பிக்கப்படும் பாடங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து, வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி குடிமைப் பணி பயிற்சி மையங்களுக்கான மாநாடு ஒன்று நடைபெறவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038683
***
MM/AG/KR/DL
(Release ID: 2038765)
Visitor Counter : 51