தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2024,மே 15 நிலவரப்படி இபிஎஃப் திட்டத்தில் புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது
प्रविष्टि तिथि:
29 JUL 2024 7:03PM by PIB Chennai
2024, மே 15 நிலவரப்படி இபிஎஃப் திட்டத்தில் புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 15.05.2024 நிலவரப்படி புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,09,93,119 ஆக இருந்தது என்று கூறியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இபிஎஃப் திட்டத்தில் புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11,91,562 ஆக இருந்தது என்று அவர் கூறினார். மகாராஷ்டிராவில் இந்த எண்ணிக்கை 21,16,863 ஆக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038701
***********
SMB/RS/KR/DL
(रिलीज़ आईडी: 2038734)
आगंतुक पटल : 114