தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

29.82 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்

Posted On: 29 JUL 2024 7:01PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021,  ஆகஸ்ட் 26 அன்று இ-ஷ்ரம் தளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இது ஆதாருடன் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குகிறது. இ-ஷ்ரம் தளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த கணக்கு எண்  மற்றும் இ-ஷ்ரம் அட்டைகளை வழங்குவதன் மூலம் பதிவு செய்வதாகவும்  . 2024, ஜூலை 22 நிலவரப்படி, 29.82 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

IR/KPG/DL


(Release ID: 2038733) Visitor Counter : 60