பாதுகாப்பு அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூலதனச் சந்தை கிடைப்பதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
29 JUL 2024 5:29PM by PIB Chennai
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூலதனச் சந்தை கிடைக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கும், இந்திய தேசிய பங்குச்சந்தை அமைப்புக்கும் இடையே 2024, ஜூலை 29 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே முன்னிலையில், பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையின் கூடுதல் செயலாளர், தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தேசிய பங்குச்சந்தை தளத்தின் மூலம், திறமையான, வெளிப்படைத் தன்மையுடன் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்புத்துறையில் உற்பத்திக்கான மூலதனத்தை பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் 5 ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிதி திரட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த பாதுகாப்புத் துறையுடன் இணைந்து கருத்தரங்குகள், புரிதல் அமர்வுகள், பயிலரங்குகள் நடத்தப்படும்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பாதுகாப்புத்துறையில் வளர்ந்து வரும் நிறுவனங்கள், தங்களின் வணிக செயல்பாடுகளை அதிகரிக்கவும், புதிய சந்தைகளை கண்டறியவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038585
***********
SMB/RS/KR/DL
(Release ID: 2038716)