கலாசாரத்துறை அமைச்சகம்
வரலாற்று நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு
Posted On:
29 JUL 2024 4:02PM by PIB Chennai
நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களை, பாதுகாத்து பராமரிக்கும் பணிகளை மத்திய தொல்லியல் ஆய்வு துறை மேற்கொண்டு வருகிறது. துறைக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்கள் மற்றும் தேவையின் அவசியத்திற்கு ஏற்ப இத்தகைய பணிகள் ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், இந்தப் பணிக்காக மாநில வாரியாக, ஆண்டு வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரங்களை எடுத்துரைத்துள்ளார். இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வட்டத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பராமரிக்க 2021-22 முதல் இம்மாதம் 15-ம் தேதி வரை 35 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திருச்சி வட்டத்தில் உள்ள நினைவு சின்னங்களை பராமரிக்க 23 கோடியே 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038495
***
MM/AG/KR/DL
(Release ID: 2038643)
Visitor Counter : 49