கலாசாரத்துறை அமைச்சகம்

உலக பாரம்பரியக் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நினைவுச்சின்னங்கள் மற்றும் உலகப் பாரம்பரியத் தலங்களைப் பார்வையிட்டனர்

Posted On: 28 JUL 2024 8:30PM by PIB Chennai

உலக பாரம்பரியக் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள், ஜூலை 21, 2024 முதல் 7 நாட்கள் உலக பாரம்பரிய விஷயங்கள் குறித்து விவாதித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நினைவுச்சின்னங்களைப் பார்வையிட்டு, ஷாப்பிங் செய்து, இந்திய உணவு வகைகளை  ருசித்து மகிழ்ந்தனர். 2024 ஜூலை 26 மற்றும் 27 தேதிகளில், உலகப் பாரம்பரியக் குழு 25 புதிய சொத்துக்களை உலகப் பாரம்பரிய பட்டியலில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அறிவித்தது.

 ஜூலை 21 முதல் 31 வரை புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் முதல் முறையாக உலகப் பாரம்பரியக் குழு கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கூடும் உலகப் பாரம்பரியக் குழு, உலகப் பாரம்பரியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிர்வகிப்பதற்கும், உலகப் பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட வேண்டிய தளங்களைத் தீர்மானிப்பதற்கும்  பொறுப்பேற்றுள்ளது. 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்தப் பிரதிநிதிகளின் தங்குமிடத்தை மறக்கமுடியாததாக்கும் வகையில், உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வின் பிரதிநிதிகளுக்காக, தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் உலகப் பாரம்பரியத் தலங்களைப் பார்வையிட இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை வசதி செய்து கொடுத்தது. உள்ளூர் பிராந்தியத்தை ஆராயவும் அதன் கலாச்சார பாரம்பரியத்துடன் ஈடுபடவும் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

எதிர்கால சந்ததியினருக்காக வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அதிசயங்களை பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர்களின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பல பிரதிநிதிகள் வரலாற்று நகரமான ஆக்ராவைப் பார்வையிட விரும்பினர். அங்கு அவர்கள் ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி நினைவுச்சின்னங்கள் தவிர, தாஜ்மஹாலின் காலத்தால் அழியாத அதிசயத்தைப் பாராட்டினர்.

மேலும் சில பிரதிநிதிகள் தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை, சஃப்தர்ஜங் கல்லறை, குதுப்மினார்  மற்றும் செங்கோட்டை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

***

(Release ID: 2038168)

PKV/BR/KR



(Release ID: 2038243) Visitor Counter : 33