பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பங்களாதேஷ் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கான 72-வது திறன் மேம்பாட்டுத் திட்டம் புதுதில்லியில் நிறைவடைந்தது
Posted On:
28 JUL 2024 11:21AM by PIB Chennai
வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG - என்சிஜிஜி) ஏற்பாடு செய்திருந்த பங்களாதேஷ் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கான இரண்டு வார திறன் மேம்பாட்டு திட்டம் புதுதில்லியில் நிறைவடைந்தது. இந்த பயிற்சித் திட்டத்தில் பங்களாதேஷ் அரசில் பொறுப்பு வகிக்கும் கூடுதல் துணை ஆணையர்கள், மூத்த உதவி ஆணையர்கள், வருவாய் துணை ஆணையர்கள் உள்ளிட்ட 45 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சி 2024 ஜூலை 15 முதல் 26 வரை முசோரியிலும் புது தில்லியிலும் நடைபெற்றது.
நிறைவு விழாவில் பேசிய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு வி. ஸ்ரீனிவாஸ் இந்தியா - பங்களாதேஷ் இடையேயான கூட்டு முன்முயற்சி பங்களாதேஷ் அதிகாரிகளுக்கு பெரிதும் பயன் அளித்துள்ளது என்றார்.
2014-2024-ம் ஆண்டு காலகட்டத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடனும், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடனும், 2700 பங்களாதேஷ் அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய மையம் நடத்தியுள்ளது.
****
PLM/DL
(Release ID: 2038096)
Visitor Counter : 72