வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

14-வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் வர்த்தகத் துறைச் செயலாளர் பங்கேற்பு

Posted On: 28 JUL 2024 10:39AM by PIB Chennai

ரஷ்யாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் 26 ஜூலை 2024 அன்று நடைபெற்ற 14 வது பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் வர்த்தக செயலாளர் திரு சுனில் பார்த்வால் கலந்து கொண்டார். இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் கருப்பொருள் "உலகளாவிய வளர்ச்சிக்காக பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்" என்பதாகும்.  பிரிக்ஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்களான ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை அவர் வரவேற்றதுடன், இந்த ஆண்டு விவாதங்களில் பயனுள்ள வகையில் பங்கேற்றதற்காக அவர்களைப் பாராட்டினார்.

உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு பலதரப்பு வர்த்தக முறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வர்த்தகத் துறைச் செயலாளர் வலியுறுத்தினார். கூட்டு மதிப்புச் சங்கிலிகளின் திறம்பட்ட செயல்பாடு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடையே விரிவடைந்த கலந்துரையாடல், டிஜிட்டல் மயமாக்கல் மின்னணு வர்த்தில் இந்தியாவின் வெற்றி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கிடையே ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் அவர் பேசினார்.

பன்முகத்தன்மையை வலுப்படுத்துவது குறித்து பேசிய அவர், உலக வர்த்தக அமைப்பில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் தொடர்பான வளர்ச்சி, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் அவை ஒருங்கிணைக்கப்படுவதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் வர்த்தகத் துறை செயலாளர் குறிப்பிட்டார்.

உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வர்த்தக செயலாளர் சுட்டிக் காட்டினார்.

 

இந்தக் கூட்டத்தில், கூட்டறிக்கைக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான 6 விளைவு ஆவணங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

****

PLM/DL



(Release ID: 2038058) Visitor Counter : 16


Read this release in: Marathi , English , Urdu , Hindi