வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கடல் உணவு ஏற்றுமதி
Posted On:
26 JUL 2024 5:11PM by PIB Chennai
இந்தியாவில் இருந்து கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சரக்கு கட்டணம் அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவில் இருந்து சரக்கு பெட்டகங்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் நன்னம்பிக்கை பாதை வழியாக திருப்பி விடப்பட்டதால், ஏற்றுமதி தொடர்கிறது என்றார்.
சவால்கள் இருந்தபோதிலும், கடல் உணவு ஏற்றுமதி 2022-23 ஆம் ஆண்டில் 17.54 லட்சம் டன்னிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 18.19 லட்சம் டன்னாக அதிகரித்து, 3.73 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் உட்பட ஏற்றுமதியாளர்களின் நலன்களை அரசு தொடர்ந்து அக்கறையுடன் கவனித்து வருகிறது. மத்திய மற்றும் வட அரபிக் கடலில் இந்திய கடற்படை கணிசமாக அளவு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பான நீண்ட தூர கடல் பயணத்தை உறுதிப்படுத்த ரோந்து விமானம் மற்றும் தானியங்கியால் இயக்கப்படும் சிறிய விமானங்கள் அமைப்பு மூலம் வான்வழி கண்காணிக்கப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்தை இந்திய கடற்படை கடலோர காவல்படையுடன் நெருங்கமாக ஒருங்கிணைந்து கண்காணித்து வருகிறது.
*****
VK/DL
(Release ID: 2037918)