நிதி அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பாதையை காட்டும் பட்ஜெட்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                24 JUL 2024 6:38PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய பட்ஜெட் 2024-25 அனைத்து குடிமக்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட 9 முக்கியமான முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உன்னதமான லட்சியத்தை எட்டும் வகையில் விரிவான உத்திகளை பட்ஜெட் கொண்டுள்ளது. 
விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் விரிவாக்கம்,  வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாடு, உள்ளடக்கிய மனித வள மேம்பாடு, சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி  பாதுகாப்பு, உள்கட்டமைப்பு , கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை அதில்  அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2024-25 திறன் மற்றும் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை அளித்து, தேசத்தை கட்டியெழுப்புவதில் மேற்கண்ட அம்சங்கள் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது. தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தித்திறனை வளர்ப்பதற்கும் தேவையான திறன்களுடன் திறன் பணியாளர்களை உறுதிப்படுத்துகிறது. வேலைவாய்ப்பு என்பது பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது மட்டுமின்றி தனிநபர்களுக்கு அதிகாரமளிக்கிறது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது.  இதற்கு மத்திய பட்ஜெட் வழிவகை செய்துள்ளது. 
*****
VK/DL
                
                
                
                
                
                (Release ID: 2037913)
                Visitor Counter : 106