ரெயில்வே அமைச்சகம்

2019-20 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வேயில் 6511 புதிய பொது பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன

Posted On: 26 JUL 2024 7:14PM by PIB Chennai

நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019-20 முதல் 2023-24 வரை மொத்தம் 6511 புதிய பொது பெட்டிகள் இந்திய ரயில்வேயில் சேர்க்கப்பட்டுள்ளன.

அம்ரித் பாரத் சேவைகள்:

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்ரித பாரத் சேவைகள், தடை இல்லாத பயணத்திற்கான அரை நிரந்தர இணைப்பான்கள், கிடைமட்ட நெகிழ் ஜன்னல்கள், மடிக்கக்கூடிய சிற்றுண்டி மேசை, மொபைல் சார்ஜிங் ஹோல்டர்கள் போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் உள்ள பெட்டிகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 

மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களை அமைப்பது தொடர்பான தற்போதைய கொள்கையின்படி, 22 பெட்டிகள் கொண்ட ரயிலில் 12 பொது வகுப்பு, ஸ்லீப்பர் வகுப்பு ஏசி அல்லாத பெட்டிகள், 08 ஏசி-பெட்டிகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பொது, குளிர்சாதன வசதி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு அதிக இடவசதி கிடைக்கிறது. ரயில் சேவையில் மொத்த பெட்டிகளில், மூன்றில் இரண்டு பங்கு ஏசி அல்லாதவை. மூன்றில் ஒரு பங்கு ஏசி வகைகள் ஆகும். அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, குளிர்சாதன வசதி இல்லாத 10,000  பொது வகுப்பு, ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளைத் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

****

PLM/DL
 



(Release ID: 2037898) Visitor Counter : 21